Header Ads



மூத்த ஊடகவியலாளர் FM பைருஸ் வபாத்தானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் தினகரன் சிரேஷ்ட ஊடகவியலாளரும் மூத்த எழுத்தாளருமான அல்ஹாஜ் எப். எம். பைரூஸ் (வயது 67) இன்று அதிகாலை (14.044.2019) காலமானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அவரது ஜனாஸா இல. 35 / 10ஏ ஹாஜி பாத்திமா கார்டன் மாக்கொல இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாஸா நல்லடக்கம் மாக்கொல இல்லத்திலிருந்து இன்று பிற்பகல் 5.00 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு இன்ஷா அல்லாஹ் இன்று (14) மஃரிப் தொழுகையை தொடர்ந்து குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாக உறுப்பினர்களில் ஒருவரான இவர் அதன் செயற்குழு உறுப்பினராக தொடர்ச்சியாக பலவருடங்கள் செயற்பட்டு வந்த அதேசமயம் போரத்தின் பல்வேறு முக்கிய உயர் பதவிகளையூம் வகித்துள்ளார். போரத்தின் பொதுச் செயலாளராக சேவையாற்றி போரத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவர்களில் ஒருவராவார திகழ்கின்றார்.

பொது வசதிகள் சபையின் சிரேஷ்ட பொது முகாமையாளராக சேவையாற்றிய இவர். தினபதி சிந்தாமணி. தினகரன். உதயம். நவமணி உட்பட பல பத்திரிகைகளில் சுதந்திர எழுத்தாளராக சேவையாற்றியவர்.

அத்துடன் மறைந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பற்றிய நினைவு கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவந்துள்ள இவர் முன்னாள் அமைச்சர்களான மர்ஹூம் பதியூத்தீன் மஹ்மூத் எம். எச். மொஹம்மட் பாக்கிர் மாக்கார்  ஏ.எச்.எம். அஸ்வர் போன்றவர்களுடன் மிகநெருக்கமாக செயற்பட்டவர்.

வானொலி மற்றும் தொலைக்காட்சிகளினதும் செய்தி பிரி வு களில் சேவையாற்றிய இவர் அரச உயர் விருதான கலாபூஷணம் மற்றும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சியால் நடத்தப்பட்ட வாழ்வோரை வாழ்த்துவோம் நிகழ்வில் "ஸவ்த்துல் ஹக்" சத்தியக் குரல் என்ற பட்டங்களை பெற்றுள்ளமை அவரது சேவைக்கு சான்றாகும்.
கல்முனையைச் சேர்ந்த இஸ்மாயீல் ஆலிம் மீரா உம்மாவின் மருமகணான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

இவரது மறைவு போரத்திற்கும் சமூகத்திற்கும் பேரிழப்பாகும். இவரது மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது.  மேலும் அன்னார் தனது மண்ணறை வாழ்விலும் மறுமை வாழ்விலும் ஈடேற்றம் பெற்று உயர்ந்த சுவனத்தை அடைய போரம் பிரார்த்திக்கிறது

ஸாதிக் ஷிஹான்
பொதுச் செயலாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
14.04.2019

1 comment:

  1. எப்.எம். பைரூஸ் திறமை மிக்க ஓர் ஊடகவியலாளராகச் செயற்பட்டார்.பத்திரிகைகளுக்கும் வானொலிகளுக்கும் செய்திகள் வழங்குவதில் மற்றவர்களைவிட எப்போதும் முந்திக்கொள்வார்.1980 ஆம் ஆண்டு 'தினபதி, 'சிந்தாமணி' பத்திரிகைகளில் நான் உதவி ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் அவருடன் ஏற்பட்ட நட்பு இறுதி வரை நீடித்தது .அன்னாரின் மண்ணறையை மணக்கும் பூங்காவாக அல்லாஹ் மாற்றுவானாக!

    ReplyDelete

Powered by Blogger.