Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்கள், மறைமாவட்ட குரு முதல்வருடன் சந்திப்பு


- பாறுக் ஷிஹான் -

யாழ் முஸ்லீம் சமூகம் அமைப்பினருக்கும் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் தலைமையிலான குழுவினருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று(23) முற்பகல் யாழ் முஸ்லீம் சமூகம்  அமைப்பில் உள்ளடங்கும் யாழ் கிளிநொச்சி மாவட்ட ஜமியத்துல் உலமா சபை யாழ் பள்ளிவாசல்கள் நிர்வாக சபை என்பவற்றின்  அங்கத்துவர்கள் யாழ்  ஆயர் இல்லத்திற்கு சென்று யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையிலான குழுவினரை சந்தித்தனர்.

இதன் போது  இயேசு பிரான்  உயிர்த்த இந்த புனிதமான நம்பிக்கையளிக்கும்  நாளில்  மிலேச்சத்தனமான  கொடூர தாக்குதல்கள்  என்றுமே மன்னிக்க முடியாதது எனவும் வன்முறைகளை தமது வழிகளாக கையாள்பவர்களின் நோக்கம் எமது நாட்டை பல்வேறு வழிகளிலும் பாதிப்படைய செய்வதே. எனவே நீண்டகாலமாக பல்வேறு வழிகளிலும் பிரச்சினைகளால் எமது வளங்களை இழந்ததும் எமக்கெதிராக பின்னப்படும் எவ்வாறான சூழ்ச்சிகளாக இருந்தாலும் முறியடிப்பதற்கு உணர்வுடன் கூடிய எமது ஒன்றிணைவு பெரும் பலமாக இருக்கும்.அதற்கான நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்கான நேரமும் இதுவே என இரு தரப்பினரும் கலந்துரையாடலில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.மிலேச்சதனமிக்கவர்கள் தமது கொடிய நோக்கங்களை அடைய பல்வேறு வழிகளிலும் முயல்கின்றார்கள்.எனவே மக்கள் எந்த நேரத்திலும்  ஒற்றுமையாக ஒன்றிணைந்து  சூத்திரதாரிகளின் திட்டங்களை முறியடிக்க பலமான ஒன்றினைவுடன் கூடிய  அர்ப்பணிப்போடு  இருக்குமாறும்  அவர்கள் கேட்டுள்ளனர்.

மேலும் இனிவரும் காலங்களில் இவ்வாறான குரோத நோக்கங்களை களைந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி எடுப்போம் என இரு தரப்பினரும் உடன்பாடு கண்ட நிலையில் கலந்துரையாடல் முடிவிற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.