Header Ads



ரணில் அழைத்தும், செல்லாத முப்படைத் தளபதிகள் - அமைச்சர்கள் மைத்திரி மீது சாடல்

இலங்கையில் தாக்குதல் நடக்கலாமென வெளிநாடுகள் கூட முன்னெச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அரச பாதுகாப்புத் துறையில் இருந்த பலவீனம் காரணமாகவே இந்த சம்பவங்கள் நடந்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று -22- கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் கூறியதாவது ,

நேற்று சம்பவம் நடந்தவுடன் அவசர தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தை கூட்டினார் பிரதமர்.ஆனால் முப்படைத்தளபதிமார் அதற்கு வர மறுத்துவிட்டனர்.மாலை அமைச்சரவை கூடியது.அதற்கு அழைத்தபோதும் தளபதிமார் வரவில்லை. பாதுகாப்பமைச்சர் ஜனாதிபதியாக இருந்தாலும் பிரதமர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அதுவும் தேசிய பாதுகாப்புக்காக அவர் அழைக்கும்போது இப்படி வராமல் இருப்பது முறையல்ல.

வெளிநாடுகள் பல ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தன .பல மாத காலங்களுக்குப் பின்னரே பிரதமர் இன்று பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். உரிய நேரத்திற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.பொலிஸ் மா அதிபர் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

உயிரிழந்தவர்களுக்கு தலா பத்து லட்ச ரூபாவும் காயமடைந்தோருக்கு ஒரு லட்ச ரூபாவும் வழங்கி பாதிக்கப்பட்ட கட்டிடங்களை புனரமைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது.

என்றார் அமைச்சர் ராஜித்த .

அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் ,ரிசார்ட் பதியூதீன் ஆகியோர் இந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டார். பெயர்கள் விபரங்கள் தெரிந்தும் ஏன் அவர்களை பாதுகாப்புத் துறை கைது செய்யவில்லையென அமைச்சர் ரிசார்த் கேள்வியெழுப்பினார். இங்கு பேசிய அமைச்சர் மனோ கணேசன், முன்னதாக அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடக்கலாமென தகவல்கள் வந்திருந்தமையை சுட்டிக் காட்டினார்.

அமைச்சர் கபீர் ஹாஷிமும் இந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.