Header Ads



பாதுகாப்பு அமைச்சின், முக்கிய அறிவிப்பு


இனவாதத்தைத் தூண்டும், மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் அல்லது அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலான கருத்துக்கள், ஊடக கலந்துரையாடல்கள், நிழற்படங்களை வௌியிடும் நபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புகள் தொடர்பில் தராரம் பாராது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசரகால சட்டத்தின் கீழ், குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

உண்மைக்குப் புறம்பான மற்றும் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு வகையில் ஊடகமொன்றை பயன்படுத்தினால், அது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புப் பிரிவினரின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு அல்லது குழுக்களுக்கு அல்லது அமைப்புக்களுக்கு எதிராக அவசர கால சட்டத்தின் கீழ், குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.