Header Ads



வெயிலின் கொடுமையிலிருந்து தப்ப, குகை அமைத்த நாய் (படங்கள்)


-பாறுக் ஷிஹான் -

சிறுவயதுகளில் சிங்க குகை பற்றி ஆவலுடனும், பிரமிப்புடனும் கதைகள் படித்திருப்போம். ஆனால்  இலங்கையில் 140 வருடங்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவுள்ள நிலையில் விலங்குகளின் வாழ் நிலையும் மோசமாகவுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள மண்மேடொன்றில் வெயில் தாக்கத்தில் இருந்து தப்புவதற்கு சிறிய குகை ஒன்றை தன் காலால் தற்போது  அமைத்து ஒய்யாரமாக உறங்குகிறது இந்த நாய்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல வெயிலின் கொடுமை. விலங்குகளையும் பாடாய் படுத்துகிறது என்பதனை இந்தப் படங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

மேலும்  இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவதற்கு மனிதர்கள் சிலர்  ஐந்தறிவு ஜீவன்களான பறவைகள் விலங்குகளுக்கு வீடு மற்றும்  அலுவலக இடங்களில் தண்ணீரை பாத்திரங்களில் ஊற்றி வைத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.  இதன் மூலம் பறவைகள்  விலங்குகளை கொடிய வெயில் தாக்கத்தில் இருந்து அவர்கள்  பாதுகாத்து வருகின்றனர்.




2 comments:

  1. காடுகளை அழிப்பதனாலேயே இலங்கையில் வரட்சி

    ReplyDelete
  2. பாவம். வறட்சி தாங்க முடியாது பதுங்கி இருந்த காட்டுப் புலிகளும் இப்போது நாட்டில்!

    ReplyDelete

Powered by Blogger.