Header Ads



கொழும்பு துறைமுக காணிகள் விற்கப்படும், தனி தேர்தல் தொகுதி உருவாக்கப்படும்


கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள துறைமுக நகரப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளது. நாட்டை விட்டு வெளியேற உள்ள துறைசார் நிபுணர்கள் 80,000 பேருக்கு அதில் வேலை வழங்கப்படும் என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக உள்ளுராட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகளை தெளிவு படுத்தும் வகையில் நேற்று முன்தினம் (8) கண்டியில் இடம் பெற்ற  கூட்டத்தில்  அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவித்ததாவது;

பெலியத்தை புகையிரதப் பாதை 1991ம் ஆண்டு திருமதி ஸ்ரீமனி அத்துலத்முதலி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.இந்த28 கிலோமீட்டர் புகையிரதப் பாதையை பூர்த்தி செய்ய 28 வருடங்கள் எடுத்துள்ளன.  இது  மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரனசிங்ன பிரேமதாச அவர்களால் பெலியத்தை புகையிரதப் பாதைக்கு அடிக்கல் நடப்பட இருந்த போதும் பின்னர் அது திருமதி ஸ்ரீமனி அத்துலத்முதலி அவர்களால் அடிக்கல் நடப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள துறைமுக நகரப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் அதனை நிர்வகிக்க  கொழும்பு மாநகர சபையல்லாத ஒரு தனி அமைப்பு உருவாக்கப்பட உள்ளதாகவும் அதற்கான சட்ட மூலங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

துறைமுக நகரப்பிரதேசம் 269 ஹெக்டேயர் பரப்பைக் கொண்டது.அதில் வசிப்பவர்களுக்கு தனியான தேர்தல் தொகுதி அமைக்கப்படும். இதன் காணி விற்பனை தொடர்பாக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது அங்கு மூலதன நகரம், சர்வதேச வைத்திய சாலை, பாடசாலை, மகாநாட்டு மண்டபம் என்பன அமைக்கப்பட உள்ளது. மேற்படி துறைமுக நகரம் முற்று முழுதாக இலங்கை அரசிற்கு உரியது.அதனை நிர்வகிப்பது தொடர்பான சட்டதிட்டங்கள் அடுத்தமாதம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட உள்ளது. துறைமுக நகரமானது வர்தமாணி அறிவித்தலின் பின் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டை விட்டு வெளியேற உள்ள துறைசார் நிபுணர்கள் 80,000 பேருக்கு அதில் வேலை வழங்கப்படும் என்றும் கூறினார்.   

(எம். ஏ.அமீனுல்லா)

No comments

Powered by Blogger.