April 09, 2019

மகள் மன்னிச்சுக்கோங்க, மாமாவுக்காக துஆ செய்துக்கோங்க...!

இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.இஸ்மாஈல் ஹஸரத் (ரஹ்) மரணித்துவிட்டார்,என்ற செய்தி பொய்யாக இருந்துவிடக்கூடாதா என்று உள்மனம் ஏங்கிக்கொண்டிருக்கிறது.

அவர் என் தாயின் உடன்பிறந்த சகோதரர். சிறுவயது முதலே உம்மா எங்களுக்கு கதையாகச்சொன்னதெல்லாம் இஸ்மாஈல் மாமாவின் ஆன்மீக வாழ்வில் நடந்த அற்புத சம்பவங்களைத்தான். அதனால்தானோ என்னவோ "இஸ்மாஈல் மாமா"என்றாலே உள்ளத்துக்குள் ஒரு உற்சாகம் ஊற்றெடுக்கும்."மகள்" என்று அழைத்தபடியே வந்து ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து தன் ஜுப்பா பொக்கட்டினுள்ள டொபிகளை அப்படியே அள்ளி கைகளில் திணிப்பார். அவர் கையில் வைத்திருக்கும் அசாவை வைத்து விளையாடுவதென்றால் எங்களுக்கெல்லாம் நிரம்பவும் இஷ்ட்டம்.யானை சவாரி,குதிரை சவாரி என எங்களை அவர் மேல் ஏற்றி வைத்து விளையாடுவார்.
அல்லாஹு ஹாலிரீ...

அல்லாஹு நாலிரீ...
அல்லாஹ் என்னோடிருக்கிறான்.!
அல்லாஹ் என்னைப்பார்க்கிறான!

என்று விளையாட்டோடு விளையாட்டாக அவர் கற்றுத்தந்த பாட்டு, எனக்குள் தக்வாவை வளர்த்தது.

சிறுவயதில் மிக திறமையான மாணவராக இருந்த அவர் கம்பளை சாஹிராவில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்து விட்டு மருத்துவத்துறையில் தனது மேற்படிப்பை தொடர்வதா அல்லது தஃவாவில் இறங்குவதா? என இரண்டு திருப்பங்களுடைய முனையில் தஃவா பாதையை தேர்ந்தெடுத்தார்.

ஹஸ்ரஜி இனாமுல் ஹஸன்(ரஹ்) அவர்களுடைய நேரடி மாணவரான இவர், டெல்லியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது, தம் வாழ்வில் நடந்த ஈமானிய சோதனைகளை கதைபோல சொல்வார்கள்.உண்மையில் கண்முன்னே கபூலாகும் அவரது துஆக்களையும் அவருக்கு பிரத்தியேகமாக கிடைக்கும் அல்லாஹ்வின் உதவிகளையும் "கராமா"களையும் எங்களில் நிறையப்பேர் கண்டிருக்கிறோம்.

அற்புதமான குணங்களுக்கு சொந்தக்காரர் அவர். பணிவுதான் அவரது கிரீடமாக இருந்தது.நேசிப்பதில் அவர் யாரிடமும் பாரபட்சம் பார்த்ததில்லை. அல்குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களது சுன்னாஹ்வையும் பெயரளவிலல்லாமல் உயிரினும் மேலாக நேசித்தார். சுன்னாக்களை அனுஅனுவாகப்பின்பற்றுவதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார்கள்.

அவரது உடை (ஸல்)அவர்களது உடையை ஒத்திருந்தது.

அவரது பாதணி கூட அச்சு அசல் சுன்னத்தாய்த்தான் அமைந்திருந்தது.

(ஸல்) நடக்கும் போது பள்ளத்தில் இறங்குவது போல முன் காலை அழுத்தி நடக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு போதும் சத்தமிட்டு சிரிக்கக்கூடியவர்களாக இருக்கவில்லை.புன்னகைக்கக்கூடியவர்களாகவே இருந்தார்கள். இதையெல்லாம் நான் நேரடியாக மாமாவிடம் பார்த்திருக்கிறேன். 

தாவூத் நபியின் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். #திப்புநபவியே #அவரது #முழு #வாழ்க்கைக்கும் #வைத்தியமாக #அமைந்தது.

எனக்குத்தெரிந்து யாரைப்பற்றியும் அவர் புறம் பேசி , பொய் பேசி பார்த்ததில்லை.

உலகலாவிய ரீதியில் சுமார் 78 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தஃவாப்பணிக்காக சென்றிருக்கிறார். அமெரிக்க பல்கலைக்கழகமொன்று அவரை சிறப்பு வளவாளராக கூப்பிட்டு கௌரவித்தது. உலகம் முழுவதிலுமுள்ள ஏராளமானோரின் ஹிதாயத்துக்கும் இஸ்லாஹ் விற்கும் இவர் காரணமாக அமைந்திருக்கிறார். மதீனா இமாம்களோடு நெருக்கமான உறவு வைத்திருந்தார். புனித கஃபதுல்லாஹ்வின் கிஸ்வா துணி மாற்றப்படும் போது முந்தைய துணியின் பாகமொன்று இவருக்கும் வழங்கப்பட்டது. இன்னும் ஏராளமான பிரத்தியேக சிறப்புக்கள் இவருக்கு இருக்கின்றன.

ரசூலுல்லாஹ்வின் அத்தனை சுன்னாக்களையும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதற்காகவே நின்கு திருமணங்கள் செய்திருந்தார். அத்தனை பேரிடமும் பாரபட்சமின்றி நடப்பதற்காக மிகவும் பிரயாசைப்பட்டார். அவரது மரணசெய்தியைக்கேட்ட மனைவிகள் சொன்னது இதுதான். "நாங்கள் உங்களை முழுமையாக பொறுந்திக்கொண்டோம்."

சமீபத்தில் ஒருநாள் என்னுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிவிட்டு இறுதியாக, "மகள் மன்னிச்சுக்கோங்க! மாமாவுக்காக துஆ செய்துக்கோங்க! என்று சொன்னபோது எனக்கு உண்மையில் கண்கலங்கிவிட்டது.
.
அவரது ஜனாஸாவில் அக்குறணை வரலாற்றிலேயே இல்லாத அளவு மக்கள் கலந்து கொண்டார்கள். ஜனாஸா இறுதிவரை உலமாக்களினது அவரது மாணவர்களினாலுமே சுமந்து செல்லப்பட்டது. மண்வெட்டியின் தேவையின்றி அத்தனைபேரின் கைப்பிடி மண்ணுமே அவரது கப்ரை நிரப்பியது.

அதிகமாக விமர்சிக்கப்பட்ட மனிதரும் அவர்தான்.

அதிகமாக நேசிக்கப்பட்ட நபரும் அவர்தான்.

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு கண்ணியம் எனும் ஆடையை அணிவிக்கிறான்.

அல்லாஹ் அவரை பொறுந்திக்கொண்டு பிர்தௌஸுல் அஃலாவில் ஹபீப் (ஸல்)அவர்களுடனும் சித்தீக்கள் ஷுஹதாக்கள்,ஸாலிஹீன்களுடனும் குடியமர்த்துவானாக...!

ஆமீன்.

#மஹ்ஜபீன்

#08.april 2019

9 கருத்துரைகள்:

எங்களது உயிரிலும் மேலான அன்பு நபியையே துன்புறுத்திய சமுதாயம்தான் இந்த சமுதாயம், அவ்வாறென்றால் இஸ்மாயில் ஹஸ்ரத் (றஹ்) அவர்களை விமர்சிப்பது என்பது இவர்களுக்கு ஒன்றும் பெரிதல்ல.
சிறப்புடையவர்களுக்குத்தான் சிறப்புடையவர்களின் சிறப்புத் தெரியும்.
என் வாழ் நாளில் நான் பார்த்ததும் கைபிடித்து முஸாபஹா செய்ததுமான இரு இறை நேசச் செல்வர்களும்.
1. சம்மாந்துறை அலியார் ஹஸ்ரத் (றஹ்)
2. அக்குரனை இஸ்மாயில் ஹஸ்ரத் (றஹ்)

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்.
(அல்குர்ஆன் : 5:56)

www.tamililquran.com

அல்லாஹ் அக்பர் எங்கே கொண்டு முடிக்க போகுதோ தெரியவில்லை...

ஆமீன்.அன்னாரது சிறிய,பெரிய பாவங்களை மன்னித்து அவரது மார்க்கப்பணியையும் பொருந்திக்கொள்வானாக.

I am afraid it is little too much!

Islam is a comprehensive religion, salaah is one aspect of it.this moulavi has done any worth while cause for the society.prayed on time well goes to jannah OK WHY THIS BUILT UP AND CULT WORSHIPING?

இறைநேசர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பது இறைவன் மாத்திரமே. எனவே அதனை அறிந்து கொள்ள இருந்த ஒரேஒரு வாசல் - அது நபி ஸல் அவர்களது மறைவுடன் நிறைவுபெற்றுவிட்டது.

அல்லாஹ்விடம் இருந்து அதனை இப்போது அறிவித்துத்தர இவ்வுலகில் யாருமே இல்லை. நமக்கு அறிவில்லாத ஒன்றை நாம் முடிவெடுத்தால் நாம் அல்லாஹ்வின் விடயத்தில் அத்து மீறியவர்களாவோம்.

இறைநேசர்கள் என்பது ஒருவருடைய செயலின் அடிப்படையிலான அவருடைய உள்ளத்தின் நோக்கத்தைப் பொறுத்தது. அதனை அல்லாஹ் மாத்திரமே அறிவான்.

நமக்கு அறிவில்லாத ஒன்றை முடிவெடுக்க நமக்கு எந்த அதிகாரமும் இல்லை - நியாயமும் இல்லை.

அல்லாஹ் நம்மை அத்துமீறிய அநியாயக்கூட்டத்தில் இருந்தும் பாதுகாப்பானாக.

Post a comment