Header Ads



முஸ்லிம் கடை­களைப் பகிஷ்­க­ரிக்கக் கோரு­வதில் உள்­நோக்­க­முள்­ளது - கல்­கந்தே தம்­மா­னந்த தேரர்

உற்­சவ காலங்­களில் முஸ்லிம் கடை­களைப் பகிஷ்­க­ரிக்கக் கோரு­வதில் உள்­நோக்­க­முள்­ளது. இதே­நி­லைமை தேர்தல் காலங்­க­ளிலும் ஏற்­ப­டலாம் என கள­னி பல்­க­லைக்­க­ழக வர­லாற்­றுத்­துறை சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கல்­கந்தே தம்­மா­னந்த தேரர் தெரி­வித்தார்.

கள­னி­பல்­க­லைக்­க­ழக இஸ்­லா­மிய மாணவர் அமைப்பின் USWA சஞ்­சிகை வெளி­யீட்டு நிகழ்வு கடந்த செவ்­வா­யன்று அமைப்பின் தலை­வர் ருக்ஸான் நிஸார் தலை­மையில் பல்­க­லைக்­க­ழக சமூக விஞ்­ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது.  இந்­நி­கழ்வில் பிர­தம பேச்­சா­ள­ராக கலந்­து­கொண்டு பேசு­கை­யிலே இத­னைத்­தெ­ரி­வித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறி­ய­தா­வது, பொருட்கள் கூடு­த­லாக விற்­கப்­படும் காலங்­க­ளிலே இவ்­வா­றான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

ஒரு நாட்டில் ஒரு சமூகம் ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு மேல் வாழ்ந்தால் அவர்கள் விருந்­தா­ளி­க­ளாக கரு­த­மு­டி­யாது. அவர்கள் நாட்டு பிர­ஜை­களே அவர்­களை மேலும் வெளி­நாட்­ட­வர்­க­ளாக கருத முடி­யாது. ஒரு நாட்டில்  நல்­லி­ணக்­கத்தை அரசோ வெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்­களோ ஏற்­ப­டுத்த முடி­யாது மக்­க­ளா­கிய  நாமே ஏற்­ப­டுத்த வேண்டும் என்றார்.


No comments

Powered by Blogger.