Header Ads



மிகப்பெரும் தேர்தலின் மூலம், முழு அரசாங்கத்தையும் மாற்றுவதே எமது நோக்கம்


மிகப்பெரும் தேர்தலின் மூலம் முழு அரசாங்கத்தையும் மாற்றுவதே எமது நோக்கம் என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தங்கல்லை, கால்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மகிந்த ராஜபக்ச,

இந்த அரசாங்கம் புதுவருடம் ஒன்று வரும் போது தெரிந்து தெரிந்து பொருட்களுக்கான வரியை அதிகரித்தது. எப்போது வரியை அதிகரிக்க வேண்டும் என்பதை இந்த அரசாங்கம் கருத்தில் கொள்வதில்லை.

எமது அரசாங்க காலத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் நத்தார் காலம் என்பவற்றில் பொருட்களின் வரிகளை அதிகரிக்க வில்லை.

இந்நிலையில், அரசாங்கம் மக்களை மீண்டும் மீண்டும் சுமைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்துக்குள் அங்கும் இங்கும் மாற்றம் ஏற்பட்டுப் பிரயோசனம் இல்லை. பெரிய ஒரு தேர்தலின் மூலம் முழு அரசாங்கத்தையும் மாற்றுவதே எமது நோக்கம் என்றார்.

2 comments:

  1. நாங்களும் அதுக்கு தான் ரொம்ப நாளாவே காத்திருக்கோம். உங்களை எப்ப இலங்கையை விட்டு அனுப்புறத்துக்கு. இந்த தேர்தலோட உங்கட குடும்பம் இல்ல பரபரயிலேயே எவனும் இனிமேல் ஒரு கவுன்சிலரா கூட நிக்க பயப்பிடுவான்.

    ReplyDelete
  2. இந்த நாட்டு மக்கள் மீதும் இந்த நாட்டின் மீதும் கருணையும் பாசமும் உள்ள அனைவரும் பொய்யும் புரட்டும் போட்டு இந்த நாட்டு மக்களை ஏமாற்றி , நாட்டு மக்களையும் அவர்களின்சொத்துக்களையும் மீண்டும் சுரண்டிக்கொள்ளையடிக்கும் நோக்கில் ஆட்சிக்கு வர எத்தனிக்கும் ராஜபக்ஸ குடும்பத்தை இந்த நாட்டிலிருந்து துரட்சி பண்ண ஒவ்வொரு இலங்கையனும் உறுதிபூணவேண்டும். அது மட்டுமன்றி தற்போது நாட்டைச் சூறையாடிக்கொண்டு பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில்தொடர்ந்தும் இந்த நாட்டு மக்களின் சொத்தக்களையும் பெறுமதியான உடைமைகளையும்வெளிநாடுகளுக்குத் தொடர்ந்தும் விற்றுக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் மக்கள் ஒருவராவது ஒரு வாக்கையாவது வழங்க வேண்டாம் என பொதுமக்களைப் பணிவாக வேண்டிக் கொள்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.