April 14, 2019

இலவச மருத்துவம் என்ற, பெயரில் ஏமாறாதீர்கள்

- Dr. MB. Halith -

நம்மவர்களுக்கு இலவச மருத்துவம் என்பதன் தார்ப்பரியம் இன்னும் புரியவே இல்லை.  டொக்டர் ஒருவர் இலவச மருத்துவம் செய்கிறார் என்று யாராவது ஒரு பொய்ப்புரளியை கொண்டுவந்தால் கற்றவர்களும் அதுதொடர்பான அறிவில்லாமல் அவ்வாறான பொய்களை பரப்பி விடுகின்றனர் ! 
அது சம்பந்தமான உண்மையை கொஞ்சம் கூட தேடிப்பார்ப்பதில்லை !

இவ்வாறு கண்டதும் பரப்புபவர்களின் நோக்கம் …

1-தமது பிரதேச வைத்தியர்களையும் இவ்வாறு மாற்றவேண்டும் அல்லது மாறவேண்டும் எனும் நல்என்னம் !

2-நமது பிரதேச வைத்தியர்கள் காசை கொள்ளை கொள்ளையாக அநியாயமாக உழைக்கிறார்கள் என்ற ஒரு மனப்பிராந்தி அத்தோடு இதனால் சிலருக்கு ஏற்படும் மனக்கிளேசம் .

3-இலவசமாக வைத்தியம் செய்தல் எனப்படும் அந்த வைத்தியர் மேல் ஏற்படும் ஒரு திடீர் மரியாதை 

4-அவ்வாறு வைத்தியம் செய்வதாக சொல்லப்படும் நல்லவிடயத்தை தம் இனம் , தம் மொழி , தன் மதம் என்ற அளவைக்குள் கொண்டு வந்து அதில் சந்தோசப்பட்டு பெருமைப்பட்டுக்கொள்வதற்கான ஒரு வழி இவைகள் தான் இவ்வாறான ஒரு பொய்ச்செய்தியை என்னவென்றே அறிந்து கொள்ளாமல் பரப்ப வழிகோழுகிறது .

#சரி #உண்மை என்ன ? , யாராவது ஒருவைத்தியர் இலங்கையில் இலவச வைத்தியம் செய்கிறாரா ?
ஓரு வைத்தியர் தனிப்பட்ட முறையில் இலவச வைத்தியம் பார்ப்பது இலகுவானதா ?

மிகக்கஸ்ட்டமானது, எவராலும்முடியாதது! ,

உதாரனமாக, சாதரனமாக தடிமலுக்கான ஒரு சிரப் , காய்ச்சலுகான ஒரு சிரப் , இருமலுக்கான ஒரு சிரப் என மூன்று சிரப் களை மாத்திரம் ஒருவருக்கு கொடுப்பதற்கு வைத்தியருக்கு மருந்துக்கு மட்டும் ஆக குறைந்த விலையில் 220 ரூபா செலவாகும் , அத்தோடு ஒரு அண்டிபயடிக் சேர்த்தால் 350 இலிருந்து 500 ரூபா செலவாகும் , இவ்வாறு 50 சிறுவர்களை ஒரு வைத்தியர் பார்வையிட 10000 ரூபாவிலிருந்து 25 ஆயிரம் ரூபா ஒரு நாளைக்கு செலவிட வேண்டும் , மாதம் 3 இலட்சத்திலிருந்து 7.5 இலட்சம் வரை செலவிடவிட வேண்டும் , இவ்வாறு ஒருவர் தனது சொந்தக்காசை செலவழித்து இலவச வைத்தியம் செய்யமுடியுமா ? அல்லது அதற்கு அவரது பொருளாதாரம் ஈடுகொடுக்குமா ?
ஒரு வளர்ந்தவருக்கான நோவுக்குறிய மருந்து , தடுமலுக்குறிய குளிசைகள் , இருமளுக்குறிய மருந்து என அடிப்படை மருந்துவகைகள் , மிக குறைந்த விலையில் உள்ளவையாயின் மாத்திரம் கொடுப்பதற்கே 200 ரூபா செலவாகும் , அத்தோடு ஒரு சாதாரன அண்டிபயடிக் கொடுத்தால் 250 ருபாவுக்கு மேல் மருந்துகளுக்கு உரிய செலவு ஏற்படும் , ஒரு நாளைக்கு இவ்வாறு 50 பேரை பார்க்க 12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாவது மருந்துகளுக்கு செலவிட வேண்டும் . மருந்துகளுக்கு மாத்திரம் மாதம் ஒன்றிற்கு 3.5 இலட்சம் தொடக்கம் 5 இலட்சம் வரை குறையாமல் தேவை இவ்வாறிருக்க எவ்வாறு இலவச வைத்தியம் பார்ப்பது? நீங்கள் கொஞ்சமாவது சிந்திக்கவேண்டாமா ?
சரி , துண்டுச்சிட்டை மாத்திரம் எழுதிக்கொடுத்து பாமசியில் மருந்து வாங்கிக்கொள்ளுங்கள் என இலவசமாக வைத்தியம் பார்க்கமுடியாதா? 
முடியும் ஆனால் அதன் போது உன்மையில் வைத்தியரிடம் செலவிடும் தொகையை அல்லது அதைவிட அதிகமாக நோயாளி செலவழிக்க வேண்டி ஏற்படும் (இது ஏன் என்பதை பிறகு ஒரு நிலையில் பார்ப்போம்) , அதைவிட இவ்வாறான முறைவேறுபல பிழைகளுக்கு வழிகோலக்கூடியது ! அத்தோடு இதுவும் கஸ்ட்டமானது, உங்கலைப்பாதிக்ககூடியது (இவற்றை இங்கே விலாவரியாக விவரிக்காமல் வேறு ஒரு நேரத்தில் எழுதுவோம்) ,
இம்முறைகளைவிட அரச வைத்தியசாலைகளில் வைத்தியசேவையை பெறுவது இலவசமானதும் , வைத்தியருக்கும் சேவை அளிப்பவரும் உங்களுக்கு #பொறுப்புகூறல் எனும் மிகப்பெரிய உரிமையை உங்களுக்கு தருகின்றது.

#ஆனாலும் மிகவும் அதிகமான வைத்தியர்கள் தமது தனிப்பட்ட பிரைவட் கிளினிக்களில் கூட , இயலாதவர்கள் , கடும் வறுமைக்குல் சிக்கியவர்கல், தானாக கேட்பவர்கள் என பலருக்கு மருந்து வகைகள் உற்பட சேவையை இலவசமாக வழங்குகிறார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம் தருகின்றேன் , அத்தோடு இவ்வாறானவர்களுக்கு தொடர்ச்சியான இலவச வைத்தியசேவையை வழங்கும் வைத்தியர்களும் இல்லாமல் இல்லை, பலருக்கு வெளிச்சிட்டைகல் வழங்குவதன் மூலம் இலவசமாக வைத்தியசேவைகள் வழங்காமல் இல்லை, அல்லது தனது சேவைக்காக பணம் பெற்றுக்கொள்ளாமல் மருந்துகளுக்கு மாத்திரம் பணத்தை பெற்றுக்கொண்டு இலவச சேவை வழங்கும் வைத்தியர்களும் நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள்.

நீங்கள் தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம் அழைப்புக்கு செவிசாய்த்து உங்களுக்கு இலவச வைத்திய ஆலோசனை வழங்கும் எத்தனையோ வைத்தியர்கள் இருகிறார்கள் ! இலங்கையில் இவ்வாரான இச்சிறிய ஒரு தொலைபேசி வைத்திய சேவையின் பெறுமதி தெரியுமா ? வெளிநாட்டில் இவ்வாறான ஒரு சேவையின் பெறுமதி தெரியுமா ? தெரிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் உங்களுக்கு கிடைக்கும் சேவையின் பெறுமதி விளங்கும்.

இவைகளைவிட உங்களுக்கு என்ன இலவசம் வேண்டும்.

#அரச வைத்தியசாலைகளில் இலவசமாக வைத்தியம் செய்யப்படவில்லையா ?

இலங்கையின் இலவசவைத்திய சேவையின் தரத்தை , அல்லது அதை நீங்கள் பெற்றுக்கொள்ளும் இலகு நிலையை நீங்கள் அறிந்துகொள்ள வேறு நாடுகளில் உள்ள வைத்திய சேவைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் அப்போதுதான் இங்கே உள்ள வைத்திய சேவையின் தரமும் ,இலகு நிலையும் தெரியும்.

சில நாடுகளில் அரச இலவச வைத்தியம் என்பது மிக அரிதானது , அத்தோடு தனியாரில் வைத்தியம் செய்வது மிகச்செலவானது ! இவ்வாறான நாடுகளில் வைத்தியர்கலை பார்வைய்டுவதற்கு கூட அதிக பணம் தேவை , ஆனால் அவ்வாறான நிலை இலங்கையில் இல்லை !

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட நீங்கள் விரும்பிய நேரத்தில் வைத்தியர்களை சந்திக்கமுடியாது , வைத்தியசாலைக்குள் அவ்வளவு இலகுவில் நுழைந்துவிடமுடியாது , உங்களுக்குரிய பொது வைத்தியர் உங்களை அனுப்பாதவரை அல்லது இமேர்ஜன்சி நிலை தவிர நீங்களாக வைத்தியசாலைக்கு போகமுடியாது , உங்களுடைய இஸ்ட்டத்திற்கு வைத்திய நிபுணரை பார்க்கமுடியாது! வைத்திய அறிக்கைகளை பெற்றுக்கொள்ளமுடியாது ! தனியாரிலும் கூட இந்தமுறைதான் !

போய்ப்பாருங்கள் ஒரு தலையிடி மாத்திரையை பெற்றுக்கொள்ள எவ்வளவு செலவளிக்க வேண்டும் , எவ்வளவு கஸ்ட்டப்பட வேண்டும், எவ்வளவு காத்திருக்கவேண்டி இருக்கும் என அறிந்துகொள்வீர்கள் , பின் எம்நாட்டின் சேவையை புரிந்து கொள்வீர்கள்.

இலங்கையின் அரச வைத்தியசாலைகள் மிகப்பெரிய சேவையை வழங்குகின்றன , மிகப்பெரிய தனியார் வைத்தியசாலைகளால் கூட வழங்கமுடியாத சேவைகளைவிட சிறந்த சேவைகளை வழங்குகின்றன , நீங்கள் பெற்றுக்கொள்ளும் சேவைக்கான செலவை நீங்கள் அறியாததாலும் , அரச வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டுப்பாடுகளும் உங்களை அரச வைத்தியசாலைகளின் பக்கம் ஒரு மதிப்பிழந்த என்னத்தை தோற்றுவிக்கக்கூடும். 

வைத்தியசாலையில் காத்திருப்பு என்பது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட மிகப்பொதுவானது , பல விடயங்களில் காத்திருப்புகள் உள்ளன பல விடயங்களில் இலங்கையில் சேவையை பெற காத்திருப்பு நேரம் குறைவானது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் ! காத்திருப்பை பிரயோசனமாக கழிக்கப்பழகுங்கள் !

அப்படியாயின் அரச வைத்தியசாலைகளில் எந்தப்பிழையும் இல்லையா? 

நிச்சயமாக உண்டு அவைபற்றி அறிந்து முன்னேற்றுவதற்கான தெளிவான திட்டமிடல்களும் ,முயற்சிகளும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன(பின்னர் பார்ப்போம்)

எனவே முடியுமான அளவு அரச வைத்தியசாலைகளை பயன்படுத்துங்கள், சில பெளதீக வளப்பிரச்சினைகளையும், சில சிடுமூஞ்சிகலையும் (சிடுமூஞ்சி சந்தர்ப்பங்ககளையும் ) உங்களால் கடந்துபோக முடியுமானால் , மிக அதிகமான விடயங்களுக்கான மிகச்சிறந்தது , இலவச அரச மருத்துவசேவைதான், தரமானதும் கூட.

இதைவிட இலவசத்திகாக ஏங்குவது உச்ச மடமை.

1 கருத்துரைகள்:

Dr. Halith அவர்கள் கூறுவது மிக மிக உண்மையானதும் சகலரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடயமுமாகும். அரசு மக்களுக்குச் சேவை செய்கின்றது. அதுவும் பெரும் தொகைப் பணத்தைச் செலவுசெய்து மருத்துவசேவையை வளப்படுத்துகின்றது. உண்மையில் சகல தரமான மருந்துகளும் வைத்தியசாலைகளில் கிடைக்கின்றன. வெளியில் நாம் மருந்து வாங்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் மிகத் தரமான மருந்துவகைகளை மிகவும் நியாயமான விலைக்கு அரசும் வைத்தியர்களும் பெற்றுத் தருகின்றனர். நான் அண்மையில் ஒரு சிங்கள ஊருக்குச் சென்றிருந்தபோது எனக்கு food allergic ஏற்பட்டுவிட்டது. அங்கிருந்த வைத்தியசாலைக்குச் சென்றேன். தரமான முறையில் இரண்டு டாக்டர்களும் இரண்டு தாதியர்களும் என்னை இரண்டு நாட்கள் கவனித்து வீட்டிற்கு சுகமாக்கி அனுப்பி வைத்தனர். (Its only an example) எல்லா வைத்தியர்களும் மிக மிக நல்லவர்களே. அவர்கள் தம் கடமைகளை யாராக இருந்தாலும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செய்கின்றனர். நாங்கள் அவர்களுடன் எங்கள் நோய் சம்பந்தப்பட்ட விடயங்கள் சகலதையும் பேசலாம். எங்களுக்காகத்தான் வைத்தியர்கள். அவர்கள் எங்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்யக் காத்திருக்கின்றனர். Dr. Halith அவர்களுடைய இந்த பலன் தரும் விடயதானத்தை சேகரித்து வையுங்கள். Jazakkumullah Kheiran Dr. MB. Halith அவர்களே. தரமான விடயங்களைத் தொகுத்து அளித்துள்ளீர்கள். அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் அருள் புரிவானாக. அல்லாஹ் உங்கள் உடலிலும் குடும்பத்திலும் தொழிலிலும் றஹ்மத் செய்வானாக. ஆமின்.

Post a Comment