Header Ads



கோத்தாபய, ஜனாதிபதியாக வரமுடியாது - துமிந்த

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவோ நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமைய இந்நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாது. எனினும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் களமிறங்குவாரென பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர் தல் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்ைகயில்,

சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல கட்சிகளுடன் இணைந்து பாரிய கூட்டமைப்பாக எதிர்வரும் தேர்தலில் களமிறங்குமென்றும் அவர் கூறினார்.

நாம் சட்டத்துக்கு கட்டுப்படும் பிரஜைகள். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீத்தா குமாரசிங்க இரட்டை பிரஜாவுரிமை வைத்திருந்த குற்றச்சாட்டின் காரணமாக தனது பாராளுமன்ற ஆசனத்தை இழந்தார். இதே சட்டம் தான் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் உள்ளது என்றும்

அவர் குறிப்பிட்டார். சட்டம் அனைவருக்கும் பொதுவாக நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன் சிறைச்சாலைக்குள் இடம்பெறுவதாக குறிப்பிடப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் கடத்தல் மாஃபியாவை கட்டுப்படுத்த ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் உச்சக ட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் நாட்டுத் தலைவரை தீர்மானிக்கும் போது நாட்டு மக்கள் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

1 comment:

  1. How can you expect the people to elect my My3 who does not know the constitution and dissolve the parliament.

    ReplyDelete

Powered by Blogger.