Header Ads



ஸஹ்ரானை வளரவிட்டது எங்கள் தவறா..? இல்லை அரசின் தவறா..?? (எம்மை அவர்களுடன் சேர்த்து விடாதீர்கள்)

Mohamed Asam 

அண்டை மதத்தவ சகோதரர்களே !
குத்திக் காட்டவில்லை , சுட்டிக் காட்டவுமில்லை, 
நியாயப்படுத்தவுமில்லை , வெறும் தற்காப்புக்காகவே கூறுகிறேன் .
1990 ஆண்டில் காத்தன்குடியில் தமிழ் புலிகள் பள்ளியில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடாத்தியதில் 147 பேர் ( குழந்தைகள் உட்டபட ) இறந்து போனார்களே அதற்கு பழி தீர்த்தோமா ? 
இல்லை , பௌத்த கடும் போக்கு வாதிகள் அண்மைக்காலங்களில் பல பள்ளி உடைப்புகள் செய்தார்களே அதற்குத்தான் பழி தீர்த்தோமா ? 
ஒன்றுமே செய்யாத கிளிஸ்தவ சகோதரர்களை 
எங்கோ உள்ள நியூசிலாந்து சம்பவத்துக்காக பழி தீர்த்தோம் என்று கூறுகிறீர்களே இது நியாயமா ?
எப்படி இருந்தும் புலிகளை தலைவர்களாக கொண்டாடினீர்கள் , நாங்கள் அப்படித்தான் செய்தோமா ? தாக்குதல் நடந்த நேரத்தில் இருந்தே மற்றவனின் தவறுக்கு மன்னிப்பு கேட்டும் , ஏலுமான பல உதவிகள் செய்தும் , அதற்கு கண்டனம் தெரிவித்தும், இன்னும் கோப மிகுதியால் எங்களுக்குள்ளேயே தர்க்கித்துக் கொண்டும் இருக்கிறோம் என்பதை நீங்கள் காணவில்லையா ?
இந்தியாவில் குண்டு போட்டதற்கான செய்திகளில் எத்தனை பாகிஸ்தானியர் சிரிப்பு smiley ஆல் லைக் செய்தனர் ? 
பாகிஸ்தானில் தாக்கியதற்கு எத்தனை இந்தியர்கள் சிரிப்பு smiley இட்டனர் 
இந்த செய்தியின் பின் ஏதும் முஸ்லிம்கள் அப்படி செய்து பார்த்தீர்களா ? எல்லாரும் சோகத்தையும் கண்டனத்தையும் தவிர வேறு எதைக் காட்டினோம் ?
வேண்டுமென்றால் முஸ்லிம்களைத் தாக்கிய அல்லது பள்ளிகளை உடைத்த பழைய செய்திகளை பேஸ்புக்கில் தேடிப்பாருங்கள் . உங்களில் எத்தனை பேர் அதை வரவேற்று சிரித்து பாராட்டியிருக்கிறீர்கள் என்று.
2017 ஆம் ஆண்டே இந்த ஸஹ்ரான் என்பவனை கைது செய்யச் சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணினோமே ? அதன்பின்னும் அவனை வளரவிட்டது எங்கள் தவறா ? இல்லை அரசின் தவறா ?
அவர்களின் தாக்குதல்களைப் பற்றி தகவல் கிடைத்தும் தக்க நடவடிக்கைகள் எடுக்காதது எம் தவறா அரசின் தவறா ?
அவனை கைது செய்யாதவர்கள் மீது , அவனுக்கு ஆதரவளித்த அரசியல்வாதிகள் மீது செல்வந்தர்கள் மீது வழக்குச் செய்யும் வரை போராடுங்கள்
இந்தச் செய்தி வந்ததிலிருந்து , முஸ்லிம்களைக் கொல் , முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என பழி சுமத்துகிறீர்கள் .
ISIS எனும் அமைப்பை எந்த முஸ்லிமாவது வரவேற்று பார்திருக்கிறீர்களா ? இல்லை எந்த முஸ்லிம் நாடாவது அவர்களை அங்கீகரித்து பார்த்திருக்கிறீர்களா ? முஸ்லிம் நாட்டில் உள்ள உங்கள் நண்பர்களை ISIS பற்றி ஒரு அரபியிடம் கேட்டுப்பார்க்க சொல்லுங்கள் . அவர்களின் ஒரே பதில் ISIS ஒரு காபிர் ( மாற்று மதத்தவன் ) என்றே சொல்வார்கள் .
அவர்கள் காசுக்காய் வேலை பார்க்கும் கைக்கூலிகள் . 
முட்டாள்ளை மூளைச்சலவை செய்து உணர்ச்சிகளைத் தூண்டி இதனை செய்விக்கின்றனர் . அவர்கள் கையில் வெடி குண்டு எனும் ஆயுதம் உள்ளது அதைக் கொண்டு அவர்களின் வெறியைத் தீர்த்துக் கொள்கிறார்கள் .
நீங்கள் உங்கள் கையில் பேஸ் புக் எனும் ஆயுதம் 
உள்ளது அதில் உங்கள் வெறியைத் தீர்த்துக் கொள்கிறீர்கள் . கொல்லணும் வெட்டணும் என்ற கொள்கையில் உள்ளவன் தீவிரவாதி என்றால் 
நீங்களும் ஒரு முகநூல் தீவிரவாதிகள்தான் .
நாங்கள் நிச்சயமாக அவர்களை வெறுக்கிறோம் . 
நாங்கள் உங்களுடன்தான் உறவாய் இருக்க ஆசைப்படுகிறோம் . உங்களைத்தான் சகோதரன் என அழைக்க விரும்புகிறோம் . எங்களை நீங்கள் வெறுத்து விட வேண்டாம் . அண்ணன் தம்பியாய் பழக விருப்பமில்லையா ? அயலவர்களாய் பழகலாம் . 
ஆனால் அந்நியர்களாய் பார்க்காதீர்கள் . அவர்களுடன் எம்மை சேர்த்துவிடாதீர்கள் . அப்பாவிகள் எம் மத்த்திலும்தான் இருக்கிறார்கள் . அவர்களைத் தண்டித்து விடாதீர்கள் . இனி இந்நாடு சிறீ லங்காவாக இருப்பதும் சோமாலியாவாக மாறுவதும் நம் கையில்தான் உள்ளது . பாகுபாட்டால் இதை நாசப்படுத்தி விடாதீர்கள் .
எங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கயவர்களை எங்களால்தான் நிச்சயம் இலகுவாக பிடித்துக் கொடுக்க முடியும் . நாம் அதை நிச்சயம் செய்வோம் . எம்மை அவர்களுடன் சேர்த்து விடாதீர்கள் .

7 comments:

  1. சரியான கேள்விகள்.சகோதரா முடியுமென்ரால் இந்த கட்டுரையை சிங்களம்,ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து,நாலாந்த பத்திரிகைகள்(மும் மொழி),அனைத்து வலைத்தலங்கலிலும் பதிவிடுங்கல்.147 பேரை பள்ளியில் சுட்டுக் கொண்டது மாத்திரமின்ரி,ஏராவூர்,மூதூர் இன்னும் சில Muslim கிராமங்களிலும் நடு ராத்திரியில் புகுந்து தூக்கத்தில் இருந்த குடும்பங்களை வெட்டியும்,சுட்டும் (சிறுவர்,பெண்கள்) அடங்கலாக,வட மாகாண எம் மக்கள் விரட்டல் இவை எல்லாம் செய்தவரை தியாகி எனவும், தலைவர் எனவும் நீங்கள் கொண்டாடுவது போல் நாங்கள் இரத்த வெரியன் சஹ்ரான் என்னும் மிருகத்தை எந்த Muslim மும் கொண்டாடவில்லை என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  2. அத்துடன் காத்தான்குடி ஆரயம்பதி தமிழ் பகுதியில்

    குருக்கள் மடம் என்ற இடத்தில்

    ஹஜ் புனித யாத்திரை சென்று திரும்பியவர்களுடன் சேர்த்து

    80 பேர்கள் 5 பெண்கள் மற்றது ஆண்கள் மொத்தமாக கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்

    ReplyDelete
  3. சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பெயர்த்து பதிவிடுங்கள்

    ReplyDelete
  4. Very well and correctly said, Mr. Mohamed Adam

    ReplyDelete
  5. Very well said. If anyone try to solve one extremism with another the situation. May deteriorate

    ReplyDelete
  6. திரு மெகமட் ஆதம் நீங்க பிழையாய் விளங்கி இருக்கீங்க LTTE காத்தான் குடியில சுட்டத நான் நல்லது என்று சொல்லல்ல அதுல இறந்த சிறுவர்கள் என்னதான் பாவம் செய்தார்கள் நான் அதற்காக நான் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பை கேட்டுக் கொள்ளுகின்றேன். ஆனால் நீங்கள் நினைப்பது போல நாங்கள் எல்லோரும் அதற்கு பாராட்டு சொல்லவில்லை எதிர்த்தவர்களும் இருக்கின்றார்கள் ஆனால் வெளிப்படையாக இல்லை காரணம் எங்களையும் எங்கே LTTE கொண்று விடுமோ என்கின்ற பயத்தில். நான் சொல்லத் தேவையில்லை உங்களுக்கு நன்றாகவே தெரியும். என்னைப் பொறுத்தவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்பு இருந்தால் நாம் யாரையும் எதற்காகவும் வெறுக்கவோ வேறுபடுத்திப் பார்க்கவோ மாட்டோம் இன்றைய காலகட்டத்தில் தேவையாக இருப்பதும் இதுதான்.
    மார்க்கம்ää சமயம் இனம் சாதி எல்லாவற்றையும் தாண்டி உண்மையாக நேசிக்க வேண்டும். நாம் எல்லோரும் மனிதர்கள். இறைவன் நினைத்தால் ஒரு நிமிடம் போதும் ஒரு சின்ன அசைவு போதும் இந்த இலங்கை முழுவதுமாக அழிந்து விடும். எமது உடலில் உயிர் இருக்கும் வரை தான் எல்லாமே. இந்தக் குறுகிய கால கட்டத்தில் எதற்கு இத்தனை பகைமை.
    எனவே பழயவைகளை பேசிக் கொண்டிருப்பதில் இனியும் பிரயோசனம் இல்லை என நான் நினைக்கின்றேன் “குழசபiஎந யனெ கழசபநவ”. நாடு 30 வருட யுத்தத்தில் இருந்து நின்மதியாக இருக்கின்ற வேளை இவ்வாறான செயல்கள் அனைவரினதும் சந்தோஷங்களையும் இல்லாமல் செய்து விடும் எனவே எமது இளம் சமுதாயத்தை துவேஷங்களைச் சொல்லி வளர்க்காமல் அன்பை கூறி வளர்ப்போம்.

    ReplyDelete
  7. Pls translate English and singala

    ReplyDelete

Powered by Blogger.