Header Ads



யார் அந்த, இஸ்மாயில் ஹஸ்ரத்...?


அக்குரணையை பிறப்பிடமாகக் கொண்ட ஹஸ்ரத் அவர்கள், பல முக்கிய மூத்த உலமாக்களின் மாணவராவார்கள் .

ஹஸ்ரத் அவர்கள் தஃவா, தஃலீம், தஸ்கியாவில் தனது வாழ்நாளை கடத்தியவர்கள் .

இலங்கையின் பல அரபிக் கல்லூரிகளில் அக்குரணை ஜாமிஆ அர்ரஹ்மானிய்யா ,மெல்சிரிபுர உஸ்வதுல் ஹஸனஹ், நாவலப்பிட்டிய தாருல் உலூம் அல் ஹாஷிமிய்யஹ், அட்டுலுகமை ஜாமிஆ இன்ஆமில் ஹஸன், பாணந்துரை தீனிய்யஹ், குல்லியதுர் ரஷாத் அல் அரபிய்யஹ் (கொழும்பு மர்கஸ் ) ஹட்டன் டிக் ஓயா உஸ்மானிய்யஹ் போன்ற கலாசாலைகளின் முரப்பியாக முதர்ரிஸாக கடமையாற்றியவர்கள்.

உர்தூ மொழியை இவர்களிடமிருந்து கற்ற உலமாக்களும், பொதுமக்களும் அதிகம் .

தஃவாவுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த இவர்கள், மூன்று வருடங்கள் பிரத்தியேகமாக பல நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.

ரமழான் வந்தால், இவர்களுடன் இஃதிகாப் இருக்க மக்கள் ஒன்றுசேருவர்,

இன்னும் பல நாடுகளுக்கு தீனுக்காக சென்றுள்ளார்கள். 

ஹஸ்ரத் மூலம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனது வாழ்வை இஸ்லாத்தை நோக்கி மாற்றிக்கொண்டவர்கள் பலர். 

அன்பும், பணிவும், பக்குவமும் நிறையவே உள்ள ஒருவர் .

திருமணங்களை முடித்தது மட்டுமின்றி முன்மாதிரியாகவும் வாழ்ந்து காட்டினார்கள்.

ஆங்கிலம், உர்தூ, அரபு, தமிழ், பாரசீக மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள்.

அடுத்தவரைப் பற்றி புறம் பேசவோ, பணத்துக்கு மடியவோ மாட்டார்கள்,

தனக்கிருந்த சமூகப்பற்றை வித்தியாசமான அமைப்பில், மிகப் பயனுள்ள விதத்தில் கொண்டு சென்றார்கள்.

எப்பொழுதும் தனது நேரங்களை அமலுக்கும், இல்முக்கும் சமூகத்துக்கும் குடும்பத்துக்குமாக பிரித்துக் கொடுத்தார்கள்.

இரவு நேரங்களை தொழுகை, அழுகை முனூஜாத்தில் கழித்தார்கள்.

மிகக் குறைவாகவே தூங்குவார்கள்.

சுன்னாக்களை மதிப்பளித்து கடைப்பிடித்தார்கள்,

தனது நோய்களுக்கு குர்ஆன் சுன்னாவில் சொல்லப்பட்ட மருந்துகளையே பாவித்தார்கள்.

மக்கள் அமல் செய்யும் விதத்தில், புத்தகங்களையும் எழுதியுள்ளார்கள்,

வியாபாரமும் செய்துள்ளார்கள்.

மிக எளிமையாக இருந்து சாதித்த மகான், எம்மைவிட்டு பிரிந்து விட்டார்கள் .

பிரிவின் பின்னர்தான் ஹஸ்ரத் அவர்களை விளங்காதவர்கள் விளங்குவார்கள். விமர்சித்தவர்கள் கவலைப்படுவார்கள் .

அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொள்வானாக ...

அபூ உமைர் M.J.M இர்பான் ரஷாதி

3 comments:

  1. Innalillahi Winna ilaihi Rajioon. ALLAH YARHAMHU

    ReplyDelete
  2. இலங்கை கண்ட தன்னிகறட்ட அல்லாஹ்வின் நேசர் என்றே நாம் கருதுகின்றோம்..
    அவர்களின் இழப்பு எமக்கு பெரும் இழப்பே!!!

    ReplyDelete

Powered by Blogger.