Header Ads



முஸ்லிம் அமைப்புக்களுடன் கலந்துரையாடிய பின்னரே புர்கா, நிகாப் ஆடைகளுக்கான தடை பாராளுமன்றத்திற்கு வரும்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

முஸ்லிம் அமைப்புக்களுடன் கலந்துரையாடிய பின்னர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் ஆடைகள் அணிவதை தடைசெய்யும் சட்டதிட்டங்களை அனுமதித்துக்கொள்ளும் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

முழு உடலையும் மறைத்து ஆடை ஆணிவதற்கு தற்காலிகமாக தடை விதிப்பதற்கு எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அத்துடன் தற்போது நாட்டில் அமுல்படுத்தியுள்ள அவசரகால சட்டத்தின் கீழ் இவ்வாறான ஆடைகளை அணிவதற்கு தடைவிதிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கின்றார். 

அதனால் முஸ்லிம் அமைப்புக்களுடன் கலந்துரையாடிய பின்னர் அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் காலத்திலும் சாதாரண நிலைமையிலும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய ஆடைகளுக்கு தடைவிதிக்க தேவையான சட்ட திட்டங்களை அனுமதித்துக்கொள்ள வேண்டும். இதுதொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க  நடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments

Powered by Blogger.