Header Ads



ரணில் அரசை வீட்டுக்கு அனுப்ப, மகிந்தவும் உதவ வேண்டும் - மைத்திரி

” காணியமைச்சின் ஒரு விடயத்தை செய்யவேண்டாமென நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.ஆனால் எனக்குத் தெரியாமல் அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது . அதற்கான உத்தரவை பிரதமரே அமைச்சருக்கு பிறப்பித்துள்ளார். இப்படியான நிலையில் தான் அரசு இயங்குகிறது.அடுத்த அமைச்சரவையில் இதனை நான் கேட்கவுள்ளேன். இப்படியான இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ”

இப்படி தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. இன்று மாலை எதிர்க்கட்சி எம் பிக்களின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இப்படிக் கூறிய அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது ,

இவ்வருடக் கடைசியில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று வரலாம்.நாங்கள் அதற்காக ஒன்றுபட்டு ஓரணியில் செயற்படவேண்டும்.பிரதமர் மற்றும் அமைச்சரவை சில விடயங்களை தான்தோன்றித்தனமாக முன்னெடுத்து வருகிறது.காணி அமைச்சின் கீழ் ஒரு புதிய காணி வழங்கல் சட்டமூலம் ஒன்றை கொண்டுவர அவர்கள் முயற்சித்தார்கள்.ஆனால் நான் அதனை வேண்டாமென கூறினேன்.ஆனால் எனக்குத் தெரியாமல் அதனை வர்த்தமானியில் பிரசுரித்துள்ளார்கள்.இது பிரதமரின் வேலை.அடுத்த வாரம் இதனை நான் அமைச்சரவையில் கேட்கவுள்ளேன். இந்த அரசின் மக்களை ஏமாற்றும் வேலைகளை நாங்கள் அனுமதிக்காக கூடாது.அதனை தடுத்து நிறுத்த ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.”

இப்படிக்கு கூறியுள்ளார் ஜனாதிபதி

T/N

2 comments:

  1. Every time, He does not know any thing.

    ReplyDelete
  2. දෙනට හොඳ නෑහ 2015 හොඳයි

    ReplyDelete

Powered by Blogger.