April 17, 2019

முத்தமிட தயங்குகிறோமா...?

ஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 15.04.2019 வெளியேறி எங்களை ஏற்ற வரும் வாகனத்திற்காக காத்திருந்தோம்.எம்மை கடந்து ஒரு பெண்மணி தன் பொருட்களை தள்ளிக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தாள்.

கடைசி track ல் வந்து கொண்டிருந்த வாகனத்தின் முன் ஆசனத்திலிருந்து வாகனத்தை நிறுத்த முன்பே ஒரு ஓமானியர் அவசரமாக இறங்கி அந்த பெண்ணை நோக்கி ஓடி வந்தார்.வீதி ஒழுங்குகளை பேணுவதில் மிக கரிசனையுடன் நடந்து கொள்ளும் ஒமானியர்களிடம் இவ்வாறான நடத்தை அபூர்வமானது.

வந்தவர் அந்த பெண்ணிடமிருந்த பொருட்களை வாங்கி வைத்துவிட்டு ,அந்த பெண்ணின் கைகளை பிடித்து முகம் மலர ஸலாம் கூறினார். கால்களை கொஞ்சமாய் மடித்து குனிந்து கைகளை முத்தமிட்டார்.பின் இரு கன்னங்களிலும் முத்தமிட்டார்.தோள்களால் அவரை அணைத்த படி காரின் பின்னிருக்கையில் ஏற்றி விட்டு பொருட்களை டிக்கியில் ஏற்றிய பின் தானும் அவருக்கருகில் ஏறி அமர்ந்தார்.

அந்த பெண் மிகவும் இளமையான ஒரு பெண்ணோ மூதாட்டியோ இல்லை.அந்த மனிதரின் தாயாகவோ மூத்த சகோதரியாகவோ இருக்கலாம்.அவர் அப்பெண்ணுக்களித்த மரியாதையை பார்த்த போது அவர் மனைவியல்ல என்று மட்டும் தெரிந்தது.

இவ்வாறான சம்பவங்கள் அரபு/மேற்கத்தேய நாடுகளில் இயல்பான ஒன்றாக இருந்தாலும் எமமிடையே சற்று விசித்திரமாகத் தானிருக்கிறது.

தாயை,சகோதரியை பற்றி பந்தி பந்தியாய் எழுதுவோம் .ஆனால் அவர்களது கைகளைப் பற்றி கட்டி அணைத்து முத்தமிட்டது எப்போது? என்று கேட்டால் விடைகளிருப்பதில்லை.என்றோ ஒருமுறை ஹஜ்ஜிற்கோ உம்ராவிற்கோ போகும் போது முத்தமிட்டிருப்போம்.அல்லது ஜனாஸாவாய் இருக்கும் போது நெற்றியில் முத்தமிடக் காத்திருப்போம்.

போனில் ஸலாம் சொல்லிப் பேசுவோம்.நேரில் கண்டால் கைகளைப் பற்றி அதே ஸலாத்தை சொல்ல ஏனோ தயங்குவோம்.

குழந்தையாய் இருந்த மகனை அல்லது மகளை முத்தங்களால் குளிப்பாட்டிய தாய்,தந்தை கூட அவர்கள் வளர்ந்த பின் முத்தமிட கொஞ்சம் தயங்குகிறோம்.முத்தமென்பதை அன்பின் அடையாளமாக அன்றி காமத்தின் தூதாகவே பலரும் கருதிக் கொண்டிருக்கிறோம்.

அதுவும் பகிரங்க இடத்தில் தன் அன்பை பரிமாறுவதை இன்னுமே தவறான ஒரு செயலாகவே நாமும் சமூகமும் பார்த்து பழகி விட்டோம்.மீறி பொது வெளியில் அன்பை பரிமாறுபவர்களைக் கூட ஏளனக் கண் கொண்டே நோக்கி பழகியிருக்கிறோம்.

குடும்பத்தினரிடையே பரிமாறப்படாத அன்பை தேடிய தேடல்கள் கட்டிளமைப் பருவத்தில் எதிர்பாலாரிடையே முட்டி மோதும் போது தவறுகள் அரங்கேறுவதை தவிர்க்க முடியாது.

வெளிப்படுத்தப்பட வேண்டிய அன்பின் உணர்வுகள் சிறைப்படுத்தப்படும் போது ரகசியமாய் உணர்வுகளுக்கான வழித் தடங்கள் தோற்றம் பெறுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

Fauzuna Binth Izzadeen

7 கருத்துரைகள்:

No..
This is something cultural thing .
You can not force people to do this ..
In Sri Lanka it will create a lot of problems

its true, our community need lot of changes

சகோதரியின் வாதம் நியாயமானதே. திருமணம் முடிக்க முடியாத மஹ்ரமிகளோடு இவ்வாறு முத்தமிட்டு அன்பைப் பரிமாறுவது நபிவழிக்கு மாற்றமானதல்ல.

ஆனால், துரதிர்ஷ்டமாக இந்த சுன்னாவை இலங்கைத் தீவில் பெருவாரியாகப் பார்க்க முடிவதில்லை.

Imam Ahmad (may Allah have mercy on him) was asked: Can a man kiss a woman who is his mahram? He said: If he has come home from a journey and does not fear (temptation) for himself. 

Ibn Muflih said: But he should never do that on the mouth, only on the forehead or head.

End quote from al-Adaab al-Shar‘iyyah, 2/256. See also al-Iqnaa‘, 3/156; al-Mawsoo‘ah al-Fiqhiyyah, 13/130 

Shaykh Ibn Baaz (may Allah have mercy on him) was asked: 

Is it permissible for a man to kiss his daughter when she has grown up and passed the age of puberty, whether she is married or not, and whether the kissing is on her hand or mouth or so on? If she kisses him in those places, what is the ruling? 

He replied (may Allah have mercy on him): 

There is nothing wrong with a man kissing his daughter, whether she is older or younger, without desire so long as that is on her cheek once she has grown up, because it is proven from Abu Bakr (may Allah be pleased with him) that he kissed his daughter ‘Aa’ishah (may Allah be pleased with her) on her cheek.

And because kissing on the mouth may lead to provocation of sexual desire, so it is better and safer not to do that. Similarly, a daughter may kiss her father on his nose or head, without desire.

But if there is desire then that is haraam for all concerned, so as to avoid temptation and so as to block means that may lead to immorality. And Allah is the source of strength.

End quote from Fataawa Islamiyyah, 3/78, 79. 

Secondly: 

Embracing sons and daughters when they are small, hugging them, smelling them and kissing them are all part of the compassions and warmth that people should give in abundance to their children and not deprive them of it, because it is compassion that Allah has created in the hearts of His slaves, and Allah only shows mercy to those of His slaves who are merciful. 

We advise fathers and mothers not to deprive them of this parental gesture, because it is a basic psychological need, especially in small children, as is proven in all psychological and educational studies, both contemporary and classical. 

It is proven in Saheeh al-Bukhaari (5997) that Abu Hurayrah (may Allah be pleased with him) said: The Messenger of Allah (blessings and peace of Allah be upon him) kissed al-Hasan ibn ‘Ali, when al-Aqra‘ ibn Haabis al-Tameemi was sitting with him.

Al-Aqra‘ said: I have ten children and I have never kissed one of them.

The Messenger of Allah (blessings and peace of Allah be upon him) looked at him, then he said: “The one who does not show mercy will not be shown mercy.” 

In Saheeh al-Bukhaari (3704) it also says: al-Bara’ entered with Abu Bakr upon his family -- after he reached Madinah as a migrant.

‘Aa’ishah was lying down as she was suffering a fever. I [al-Bara’] saw her father kiss her cheek and say: 'How are you, O my daughter? '

Allah knows the best.

www.islamqa.info

People are addicted to their cultural value of their land. It does not mean they are not in love each other.

Post a comment