Header Ads



அலுகோசு பதவிக்கு பட்டதாரி​யொருவர், விண்ணப்பித்திருப்பது துன்பமான சம்பவம்

அலுகோசு பதவிக்கான நேர்காணலில் பட்டதாரி ஒருவர் பங்குபற்றியுள்ளமையானது, இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்தற்கு பின்னர் இடம்பெற்றுள்ள துன்பகரமான சம்பவமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.  

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.   அவர் மேலும் தெரிவித்ததாவது, 

எமது அரசின் காலத்தில் 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதை ஒரு கொள்கையாக அமுல்படுத்தியிருந்தோம். ஆனால், அம்முறைமை இன்று சின்னாபின்னமாகியுள்ளது. 70ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பில்லாது உள்ளனர். வரவு- செலவுத்திட்டத்தில் இது குறித்து எவ்வித கவனத்தையும் அரசு செலுத்தியிருக்கவில்லை.  

வரவு- செலவுத் திட்டத்தில் பிரதானமாக பேசப்பட்டதானது, உலகில் உயர்தர பல்கலைகழகங்களில் 14 பேருக்கு கல்விகற்பதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படுமென கூறப்பட்டமை தொடர்பிலும், 1000 பட்டதாரிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படுமென கூறப்பட்டமை தொடர்பில் மாத்திரமே ஆகும்.  

(கமல் ஜெயமான்ன) 

No comments

Powered by Blogger.