Header Ads



முஸ்லிம்கள் கடும் கோபத்துடன் உள்ளனர், மத ஒருமைப்பாடு நிலவி வருகிறது - பிரதமர் ரணில்

இலங்கை குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தொடர்பில்  முஸ்லிம்கள் கடும் கோபத்துடன் உள்ளனர் என ஊடக மாநாட்டில் தற்போது பிரதமர் ரணில் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இலங்கை பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளனர், வெளிநாட்டினர் யாரையும் கைது செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது அவர் மேலும் குறிப்பிட்டதாவது

நியூசிலாந்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியா என இப்போது கூற முடியாது.
இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமான சில நபர்களை அடையாளம் கண்டு இருக்கிறோம், விரைவில் அனைவரையும் கைது செய்வோம்.

இரண்டு நாட்களுக்கு ஈஸ்டர் அன்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.  இந்த குண்டுவெடிப்பில் 320க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடந்த விசாரணையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. விசாரணை சரியான திசையில் செல்வதாக தெரிகிறது.

குற்றவாளிகளை நெருங்கி வருகிறோம். சில நபர்களை ஏற்கனவே அடையாளம் கண்டு இருக்கிறோம். விரைவில் அனைவரையும் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறேன். இலங்கைக்கு நிறைய நாடுகள் உதவி வருகிறது. இலங்கைக்கு உதவும் நாடுகள் அனைத்திற்கும் நன்றிகள்.

இலங்கையில் மத ஒருமைப்பாடு நிலவி வருகிறது. அதை குலைக்க முடியாது. அனைத்து மதத்தினரும் எங்களிடம் தொடர்பு கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். எந்த தாக்குதலாலும் இலங்கையில் எங்களின் ஒற்றுமையை குலைக்க முடியாது, அவர்களால் எங்களிடம் மத பிளவை ஏற்படுத்த முடியாது. அதை பற்றி பேசுவது கூட அவசியமற்றது.

இலங்கைக்கு உதவுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேபோல் சர்வதேச போலீஸ் இலங்கையில் விசாரணையும் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments

Powered by Blogger.