April 23, 2019

எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைகழக, இலங்கை மாணவர் ஒன்றியத்தின் கடுமையான கண்டனம்

 நம் தாய்நாடான இலங்கையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத கொடூரமான கொலைகளை " அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் படித்துமுடித்த இன்னும் படித்துக்கொண்டிருக்கும்" மாகணவர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இஸ்லாமிய மார்க்கம் சாந்தமும்,அன்பும்,நீதியும்,உண்மையும்,மிக உயர்ந்த மனிதநேய பண்புகளை கொண்டதாகும். 

ஒருவரை கொலைசெய்வதை இஸ்லாம் பெரும்பாவமென முஸ்லிம்களையும் பூமியில் வாழும்  மனிதர்களையும் கடுமையாக எச்சரிக்கின்றது. மேலும் பூமியில் உள்ள உயிர்பிராணிகளை கூட காரணமின்றி கொல்லவேண்டாமென்று எச்சரிக்கின்றது. அதனால் நீங்கள் நரகம் செல்வீர்கள் என்றும் கண்டிக்கிறது.
எங்களுக்கு மனிதநேய பண்புகளை சொல்லித்தர வந்த அல்லாஹுவின் தூதர் (நபிமுகம்மது ஸல்) அவர்கள் மிகவும் உயர்தர மனிதநேய பண்புகளுடன் வாழ்ந்து அதை ஏனைய மனிதர்களுக்கும் எடுத்துச் சொன்னார்.
 நான் மிக அழகான பண்புகளை ( வாழ்கையில் எடுத்து நடந்து)பூர்தி செய்ய அல்லாஹுவால் அனுப்பப்பட்டுள்ளேன் என்று ஏவினார்கள்.
"إنما بعثت ﻷتتم مكارم اﻷخلاق"
மேலும் அதிகமான பண்புகளை எங்களை கடைபிடிக்கும்படி ஏவியுள்ளார்கள். அவைகளில் ஓர்இரண்டை இங்கு சொல்கின்றோம்.

"أمرنا بصدق الحديث وأداء اﻷمانة وصلةالرحم وحسن الجوار والكف عن المحارم والدماء"
உண்மையை சொல்லுங்கள்,அமானித உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள், இனபந்துக்களை சேர்ந்து நடங்கள், உங்களை அண்டிவாழ்பவர்களுடன் அழகான பண்புகளுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்லஹுவால்) தடுக்கப்பட்ட பாவங்களையும்,கொலைபோன்ற கொடூர செயல்களையும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று எங்களுக்கு ஏவியுள்ளார்கள். 
ஆகவே நாங்கள் இஸ்லாதில் இதுபோன்ற நல்லவிடங்களைதான் இலங்கையில் உள்ள அரபு கல்லூரிகள் உட்பட அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் இஸ்லாம் பற்றி படித்துள்ளோம். 

எனவே பூமியில் நிகழும் இதுபோன்ற கொடூர பயங்கரவாத செயல்கள் இஸ்லாதிலும் இல்லை அவ்வாறு நபி முகம்மது ஸல் அவர்கள் எங்களுக்கு போதித்ததுமில்லை.

ஓர் இறை கொள்கை இஸ்லாத்தை சொல்லவந்த எங்கள் பாட்டன் முதல் மனிதர் நபி ஆதம்  தொடக்கம் நபி முகம்மது (ஸல்)அவர்கள் கடைசியாக இந்த நட்பண்புகளை எங்களுக்கு ஏவியுள்ளார்கள் மேலும் இவர்கள் மனிதநேய உயர்பண்புகளை மனிதர்களுக்கு எடுத்து சொல்லி தீங்கு செய்யும் மனிதர்களை அப்பண்புகளை விட்டும் தடுத்து அல்லாஹுவின் வேதனையிலிருந்து அவர்களை காப்பாற்ற முயட்சித்தார்கள்.

மேலும் எங்களை நட்பண்புகளுடன் நடந்து கொள்ளும்படியும் நல்ல காரியங்களை செய்யும் படியும் அவைகளை ஏவும்படியும் அதற்காக அல்லாஹுவிடம் கூலியை பொறுமையாக எதிர்பார்க்கும்படியும் சொல்லியுள்ளார்கள்.

நாங்கள் 21/4/2019 அன்று இலங்கையில் நிகழ்ந்த பயங்கரவாத கொடூரச்செயல்களை கண்டிக்கின்றோம். இந்த பாயங்கரவாத நிகழ்வில் பாதிக்க்கப்பட்ட அனைவருக்கம் எங்களுடைய அனுதாபத்தை தெரிவிக்கின்றோம். மேலும் இதனுடன் சம்மந்தப்பட்டவர்களை கண்டறிந்து கடுமையான சட்டத்தை அவர்களுக்கு வழங்கும்படி எங்கள் அரசாங்க பொறுப்புதாரிகளை கேட்டுக்கொள்கின்றோம்.
பூமியில் எந்த பகுதியிலும் இவ்வாறான பயங்கரவாத செயல்களால் பொதுமக்கள் கொல்லப்படுவதை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
அனைத்தையும் கண்காணித்து உங்கள் இறைவன் எதிர்பார்து இருக்கின்றான்.

مِنْ اَجْلِ ذٰ لِكَ ‌ۛ ؔ ۚ كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا ؕ وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ؕ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ‏ 
5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

T.M.றியாழ்
(மனாரி,அஸ்ஹரி)
எகிப்து
அல் அஸ்ஹர் இலங்கை மாணவர் ஒன்றிய ஆலோசகர்

0 கருத்துரைகள்:

Post a Comment