Header Ads



ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெரும் - சம்பிக்க

வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் பெற்று ஜனாதிபதி தேர்தலில் உறுதியான வெற்றியை எம்மால் பெற முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரதான நபர்கள் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் ஜனாதிபதியின் அரசியல் நகர்வுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பதில் வழங்கிய அவர்,

ஐக்கிய தேசிய முன்னணியாக நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் இடையில் பல கருத்துக்கள் நிலவுகின்றது. ஆகவே இவை அனைத்தையும் தாண்டி பொதுவான ஒரு நிலைப்பாட்டினை எம்மால் எட்ட முடியும். இப்போதும் அவ்வாறான நிலைப்பாடு ஒன்றினை நாம் எட்டியுள்ளோம்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும். அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெரும். இதில் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவில் வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவில் எம்மால் ஆட்சியை அமைக்க முடியும்.

சகல மக்களுக்குமான பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை நாம் நல்லாட்சியில் முன்னெடுத்து வருகின்றோம். அதனை தொடர்ந்தும் முன்னெடுத்து ஆரோக்கியமான திசைக்கு நாட்டினை கொண்டு செல்வோம் என்றார்.

No comments

Powered by Blogger.