Header Ads



சர்வதேச கூட்டுறவு ஆராச்சிற்கான, பிரதிநிதி இலங்கை விஜயம் - இலங்கை சம்மேளனத்தின் தலைவர் ரியாஸுடன் கலந்துரையாடல்


சர்வதேச கூட்டுறவு பிரதிநிதித்துவ ஆராச்சியாளரும் , கலாநிதிமான கிளாவுடியா சான்ஷான்ஸ் இலங்கைக்கான இளைஞர் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் முஹம்மது ரியாஸுடன் விஷேட கலந்துரையாடல் இன்று (2019-04-01) நடைப்பெற்றது. கலாநிதி கிளாவுடியா சான்ஷான்ஸ் இலங்கையில் இளைஞர்களின் தற்போதைய நிலை, வேலைவாய்ப்பு ,தொழில் முன்னேற்றத்திற்கு கூட்டுறவு ( COOP - YES) பங்களிப்பு , அரசாங்கத்தின் வகிபங்கு, சர்வதேச கூட்டுறவு சம்மேளனத்தினடம் எதிர்ப்பார்ப்பு   எவ்வாறு என்று சம்மேளனத்தின் தலைவர் முஹம்மது ரியாஸ் அவர்களின் வினவப்பட்டது. 

இலங்கை கூட்டுறவு இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் முஹம்மது ரியாஸ் தெரிவிக்கையில் இளைஞர்களை (COOP YES) ஊடாக இணைத்து அவர்களுக்கான தொழில் வழிகாட்டல் , தொழில் முயற்சி ஊக்குவிப்புக்களை நாடாள ரீதியாக செய்து வருகின்றோம். தற்போது கண்டி , கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கான இளைஞர் படையினை உருவாக்கி அவர்களுக்கான தொழில் முயற்சியாளர்களை மேற்கொண்டு வருகின்றோம். 2020 களில் நாடு தழுவிய ரீதியில் சுமார் பத்தாயிரம் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (COOP - YES) பயணிக்கின்றது அதுமட்டுமின்றி சர்வதேச உதவிகளான சிறந்த தொழில்நுட்ப பயிற்சி, கல்வி , நவீனத்துவ வழிக்காட்டல் , புலமைப்பரிசில்களை எதிர்ப்பார்க்கின்றோம்.


No comments

Powered by Blogger.