Header Ads



டென்சன் மூட்டில் ஜனாதிபதி, சிங்கள புதுவருடத்தில் கலகலப்பும் காணாமல் போனது

-Tn-

ஜனாதிபதியின் நேற்றைய -14-  புதுவருட நிகழ்வில் கலந்துகொள்ள எல்லா அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் வெகு சிலரே கலந்து கொண்டனர். முன்னதாக தேசிய நிகழ்வாக இதனை ஒழுங்கு செய்ய பேசப்பட்டது.ஆனால் அரசியல் களம் நன்றாக இல்லாதபடியால் தனித்தனியாக செய்ய தீர்மானிக்கப்பட்டது.

நேற்றைய நிகழ்வு ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் காலை 11 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.11 மணிக்கு சென்ற பிரமுகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்.பிற்பகல் 2 மணிக்கு நிகழ்வுக்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்வு ஆரம்பிக்க தாமதமானதால் ஏற்பாட்டாளர்களிடம் கூறிவிட்டு வெளியேறினார்.

ஆனாலும் கூட்டமைப்பின் எம் பி சுமந்திரன் ,வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் , ஈ .பி. டி . பி டக்ளஸ் தேவானந்தா எம் பி ஆகியோர் கலந்து கொண்டனர். டக்ளசும் சுமந்திரனும் காலையில் சென்று திரும்பி வந்து மீண்டும் பிற்பகல் சென்றவர்களாவர் ஆசிய வானொலிக் கூட்டுத்தாபன தலைவர் ரெனோ சில்வாவும் சுமந்திரன் எம் பியும் நீண்ட நேரம் அரசியல் பேசிக் கொண்டிருந்தனர்.

”தென்னிலங்கை மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு அரசு மீது ஒருவித அதிருப்தி நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட ரெனோ சில்வா – வடக்கின் நிலைமை எப்படி?” என்று சுமந்திரனிடம் வினவினார். பொருளாதார பிரச்சினை மக்களை பெரிதும் பாதித்துள்ளது என்று அதற்கு பதிலளித்தார் சுமந்திரன் .

வழமையாக கலகலப்பாக இருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய நிகழ்வில் சற்று டென்ஸனாக இருந்தாரென சொல்லப்பட்டது.அரசியல் ரீதியில் இவ்வருடம் அவருக்கு முக்கியமான வருடம்.ஜனாதிபதித் தேர்தல் – தேர்தலுக்கான வேட்பாளர் தீர்மானம் – மஹிந்தவுடனான அரசியல் கூட்டு – பிரதமர் தரப்புடனான மனக்கசப்பு உட்பட்ட சவால்கள் அவர் முன் இருப்பதால் அவர் சற்று டென்சன் மூட்டில் இருப்பதாக சொல்லப்பட்டது.

No comments

Powered by Blogger.