April 12, 2019

முஸ்லிம் இளைஞர்கள் மீது, ஏனைய மதத்தினருக்கு பொறாமை ஏற்படுகிறது - பேரா­சி­ரியர் தயா அம­ர­சே­கர


அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஏற்­பாடு செய்­தி­ருந்­த சிங்­கள மொழி­யி­லான அல்­குர்ஆன் விளக்­க­வுரை வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது. இதில் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக சமூ­க­வியல் பீட பேரா­சி­ரியர் தயா அம­ர­சே­கர உரை­யாற்­று­கையில், 

இது முக்­கி­ய­தொரு பய­னுள்ள நிகழ்­வாகும். உலமா சபையின் சிங்­கள மொழி­யி­லான அல்­குர்ஆன் விளக்­க­வுரை வெளி­யீடு இன்­றல்ல இற்­றைக்குப் பல­வ­ரு­டங்­க­ளுக்கு முன்பு வெளி­யி­டப்­பட்­டி­ருக்க வேண்டும்.  மொழி­பெ­யர்ப்பு செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும். அவ்­வாறு வெளி­யி­டப்­பட்­டி­ருந்தால் தேசிய ஒரு­மைப்­பாடும், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கமும் மேலும் வலுப்­பெற்­றி­ருக்கும்.

1970, 1980 களில் சாதி, சமய வேறு­பா­டுகள் கார­ண­மாக நாட்டில் பல்­வேறு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. பௌத்த மக்­க­ளி­ட­மி­ருக்கும் தவ­றான கருத்­து­களை இல்­லாமற் செய்­வ­தற்கு சிங்­கள மொழி­யி­லான அல்­குர்ஆன் விளக்­க­வுரை பெரிதும் உறு­து­ணை­யாக இருக்கும். நாம் இனம், மதம் என்ற வகையில் வேறு கலா­சா­ரங்­க­ளையும் கொள்­கை­க­ளையும் கொண்­டி­ருந்­தாலும் அனை­வரும் மனி­தர்கள் என்ற வகை­யிலும் ஒரே தேசத்­தவர் என்ற வகை­யிலும் ஒன்­று­பட வேண்டும்.

இச்­சந்­தர்ப்­பத்தில் எனது கல்­லூரி வாழ்க்கை நினை­வுக்கு வரு­கி­றது. கொழும்பு ஆனந்தா கல்­லூ­ரியில் நான் பயின்ற போது முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் அங்கு பயின்றார். அவர் கல்­லூ­ரியில் அனை­வ­ரதும் அன்­பினைப் பெற்­றி­ருந்தார். அனை­வ­ரு­டனும் சகோ­தர பாசத்­துடன் பழ­கினார். கல்­லூ­ரியில் மாணவ தலை­வ­ரா­கவும் நிய­மனம் பெற்றார். அன்று எங்­களை மொழியோ, சம­யமோ, இனமோ வேறு­ப­டுத்­த­வில்லை. அல்­குர்ஆன் சிங்­கள மொழியில் மொழி பெயர்க்­கப்­பட்­டி­ருப்­பது போன்று மகா­வம்­சமும் தமிழில் மொழி பெயர்க்­கப்­பட வேண்டும்.

முஸ்லிம் கடை­க­ளுக்குச் செல்­லா­தீர்கள், முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களைப் பகிஷ்­க­ரி­யுங்கள் என்று ஒரு­சாரார் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வி­டு­கி­றார்கள். சிங்­க­ள­வர்­களின் கடை­க­ளிலே பொருட்­களைக் கொள்­வ­னவு செய்­யுங்கள் என்­கி­றார்கள். அவ்­வாறு எதிர்ப்பு தெரி­விப்­ப­வர்கள்  சில­காலம் கழித்து முஸ்லிம் கடை­க­ளுக்குச் செல்­வார்கள். ஏனென்றால் முஸ்லிம்கள் உதவி செய்­ப­வர்­க­ளாக இருக்­கி­றார்கள்.

எமது சமயம் என்று இறுக்­க­மான கோட்­பாட்டில் இருந்­த­வர்­க­ளுக்கு வர­லாற்றில் இடம் கிடைக்­க­வில்லை. நாம் எந்த சம­யத்­த­வர்­க­ளாக இருந்­தாலும் எமக்குள் நற்­கு­ணங்கள் இருக்­க­வேண்டும். இதுதான் எமது கலா­சாரம்.

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் முஸ்லிம் மாண­வர்­களை விட முஸ்லிம் மாண­வி­க­ளையே காண்­கிறேன். முஸ்லிம் மாண­வர்கள் கல்­வியில் ஆர்­வ­மின்றி இருக்­கி­றார்கள். மாண­வி­களே கல்­வியில் அதிக ஆர்வம் காட்­டு­கி­றார்கள். முஸ்லிம் மாண­வர்கள் குறுகிய காலத்தில் பெரும் பணம் உழைத்துக் கொள்ள வேண்டும், பெரிய வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்ற இலட்­சியம் கொண்­ட­வர்­க­ளாக கல்­வியில் அக்­க­றை­யின்றி பணம் ஈட்டும் செயற்­பா­டு­க­ளி­லேயே இருக்­கி­றார்கள். இதனால் ஏனைய மதத்­தி­ன­ருக்கு இவர்கள் மீது பொறாமை ஏற்­ப­டு­கி­றது. நாம் எமது வாழ்­நாளில் எதனை உழைத்துக் கொள்­ள­வேண்டும் என தம்­ம­ப­தவில் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளது. பணம் வாழ்க்­கையில் நிம்­ம­தியைத் தராது. எனது சமயம், எனது இனம் என்­ப­தற்­கா­கவே இலங்­கையில் யுத்­தங்கள் ஏற்­பட்­டுள்­ளன. முஸ்­லிம்கள் பற்றி சிங்­க­ளவர் மத்­தியில் நிலவும் தவ­றான கருத்­து­களை அல்­குர்ஆன் சிங்­கள மொழி பெயர்ப்பு நீக்­கி­விடும் என்று நினைக்­கிறேன். எமது நாட்டை ஆண்ட சிங்­கள மன்­னர்கள் இஸ்­லா­மிய நாடு­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி­யி­ருந்­தமை வர­லாற்று காலம் முதல் சிங்­க­ள­வர்­க­ளுக்கும், முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையில் இருந்த ஒற்­று­மையை பறை­சாற்­று­கி­றது.

ஒவ்­வொ­ருவர் பேசும் மொழியின் உள்ளே தான் கலா­சாரம் இருக்­கி­றது. எனவே நாம் கலா­சா­ரத்தை கௌர­விக்க வேண்­டு­மென்றால் மொழி மீது பற்­றுக்­கொள்ள வேண்டும் அனைத்து மொழி­க­ளையும் கற்­க­வேண்டும் என்றார்.

3 கருத்துரைகள்:

நீங்களும்,நாங்களும் ஒன்ராக இணைந்து Sri Lanka வில் வாழ முடியும்.எத்தைனையோ தலைமுறையாய் அவ்வாறுதான் வாழ்ந்து கொண்டிருந்த எம்மிடையே பிளவை ஏற்படுத்தியது (டயக்ஷ் போரா புலிகள்) பொறாமை கொண்ட அந்த மூன்ராம் இனம் நம்மை பிரிக்க துடிக்கிறது.ஆனால் அந்த பொரமை தான் அழித்து விட்டது முள்ளிவாய்க்காலில்.அதுதான் இப்போது அவர்களுக்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை.சதிவலையுடன் சில பிக்குகலுக்கு பணத்தை கொடுத்து அலையுரானுக.ஆனால் சிங்கள மக்களில் 95% மக்கள் இன்னும் Muslim மக்களோடுதான் உள்ளார்கள் என்பதை இந்த பாசிச வாதிகள் புரியும் காலம் விரைவில்.

All oK.  Failed to implement Tamil as a national lunguage in proper way was the main cause for the ethnic and religious riots and the war country faced which professor should mentioned here. 

Post a Comment