Header Ads



குருநாகல் முஸ்லிம் மையவாடியை சுவீகரிக்க, மாநகர சபை முயற்சி


குருநாகல் பஸாரில் அமைந்துள்ள  ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளிக்குச் சொந்தமான மையவாடிக்காணியை குருநாகல் மாநகர சபை சுவீகரிக்க மேற்கொண்டுவரும்  முயற்சிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

மாநகர சபையின் ஆளும் கட்சியான பொது ஜன பெரமுனவும் எதிர்க் கட்சியான ஐக்கிய  தேசியக்  கட்சியும் இணைந்து இந்த தீர்மானத்தை மாநகர சபையில்  கொண்­டு­வந்த போது, அகில இலங்கை  மக்கள் காங்­கிரஸ் மாந­கர சபை உறுப்­பினர் மொயி­னுதீன் அசார்டீன் கடு­மை­யாக எதிர்த்­த­துடன் இந்த முயற்­சியை கைவி­டு­மாறும் வலி­யு­றுத்திப்  பேசினார்.

குரு­நாகல் முத்­தெட்­டு­க­லவில் அமைந்­துள்ள ஒன்­பது ஏக்கர் விஸ்­தீ­ர­ண­முள்ள இந்த மைய­வா­டி­யையும் அதற்கு அரு­கா­மையில் உள்ள ஜும்ஆ  பள்­ளிக்குச் சொந்­த­மான இரண்டு ஏக்கர் விஸ்­தீ­ர­ண­முள்ள மைய­வா­டி­யையும் குரு­நாகல் நகர அபி­வி­ருத்தித்  திட்­டத்தின் கீழ் சுவீ­க­ரிக்கும்  வகை­யி­லேயே இந்த பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது.

பள்­ளிக்கு நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்டு உரித்­தாக்­கப்­பட்ட இந்த காணியை மாந­கர சபைக்கு சொந்­த­மாக்க முயல்­வது எந்த வகையில்  நியா­ய­மா­னது என்று கேள்வி எழுப்­பிய மாந­க­ர­சபை உறுப்­பினர் அசா­ருதீன், இதனைக்  கைவி­டாத பட்­சத்தில் ஆளும் கட்­சிக்­கான  தமது  ஆத­ரவை விலக்கப் போவ­தா­கவும் தெரி­வித்தார்.

இதனை அடுத்து குரு­நாகல் மேயர் துசார சஞ்­சீவ,  இது தொடர்பில் பிர­தேச செய­லா­ளரின் கவனத்துக்கு கொண்டுவந்த பிறகு மேற்கொண்டு  முடிவை அறியத்தருவதாக உறுதியளித்தார்.
-Vidivelli

2 comments:

  1. We must fight against injustices. This is one of such cruelty of Kurunegala municipal council.

    ReplyDelete
  2. We must fight against injustices. This is one of such cruelty of Kurunegala municipal council.

    ReplyDelete

Powered by Blogger.