April 24, 2019

ஹிஜாபுடன் தனது குழந்தைக்கு, சிகிச்சைபெற சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுப்பு

- எம்.எல்.எஸ்.முஹம்மத் -

கடந்த சில தினங்களாக நாட்டில் அசாதாரண சூழ்நிலை தொடர்கின்ற நிலையில் கறுப்பு நிற ஹிஜாபுடன் தனது குழந்தைக்கு சிகிச்சை பெற இரத்தினபுரி வைத்தியசாலைக்குச் சென்ற முஸ்லிம் பெண்மணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று  காலை(23) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக குறித்த பெண்மணி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்

"நேற்று காலை(23) நான் எனது குழந்தைக்கு வெளி நோயாளர் பிரிவில்  சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் எனது வழமையான கறுப்பு நிற ஹிஜாப் ஆடையுடன் வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன்.

எனினும் அங்கு கடமையில் இருந்த தாதிகள் மற்றும் வைத்தியர் உட்பட அனைவரும் என்னை ஒரு பயங்கரவாத சந்தேக நபர் போன்று பார்க்க ஆரம்பித்ததுடன் மருந்து வேண்டுமானால் கறுப்பு நிற ஹிஜாப் உட்பட முந்தானையையும் அகற்றி விட்டு வருமாறு எச்சரித்தனர்.

நீங்கள் எங்களை கொலை செய்ய வந்திருக்கிறீர்கள்.உங்களை போன்றவர்களை கவனிக்கக் கூடாது என்று எமக்கு செய்தி வந்திருக்கிறது.நீங்கள் இந்த ஆடையில் குண்டுகளை மறைத்து வரலாமென்று நாங்கள் அச்சப் படுகின்றோம்.நாங்கள் உங்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் அன்றி உங்கள் உடம்பை பார்க்க விரும்புகின்றவர்கள் அல்ல. ஏனைய பெண்களுக்கு இருப்பது போன்றுதான் உங்களுக்கும் இருக்கிறது.மருந்து தேவையானால் இந்த ஹிஜாபை கழட்டி விட்டு வாருங்கள் என தன்னிடம் வைத்தியர் உட்பட அங்கிருந்த தாதிகள் தெரிவித்ததாக அப்பெண்மணி குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து நான் எனது ஹிஜாபை முற்றாகக் கழட்டி விட்டு வைத்தியரிடம் சென்று எனது குழந்தைக்கு மருந்து பெற்றுக் கொண்டேன்", எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து  அப்பெண்மணி கருத்துத் தெரிவிக்கையில்

"முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒருசிலரின் தவறான நடவடிக்கைகளால் அப்பாவி பொதுமக்களாகிய நாங்கள் வீனாக தண்டனை அநுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இன்று எமது மானத்தை பாதுகாத்துக் கொள்வதும் பாரிய சவால் மிக்கதாக மாறியிருக்கின்றது.

எனினும் நான் சிங்கள மொழி மூலம் உயர் தரம் வரை நன்றாகக் கற்றவள் என்பதால் எனக்கிருந்த அறிவினைக் கொண்டு அவர்களுடைய சந்தேகங்களுக்கு பதிலளிக்க முயற்சி செய்தேன்.

ஆனாலும்  எம்மைப் பற்றிய  அவர்களின் பிழையான கண்ணோட்டமும்,தேவையற்ற நெருக்குதல்களும் தொடரும் என்று நான் நினைக்கின்றேன்", எனவும் அப்பெண்மணி தெரிவித்தார்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் தினமும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்வதுடன் ஒருசில முஸ்லிம் வைத்தியர்கள் உட்பட முஸ்லிம் ஊழியர்கள் சிலரும் கடமை புரிந்து வருகின்றனர்.

5 கருத்துரைகள்:

Bomb potawan habaya(face cover) oda waralla Jubba thoppi potu waralla. Ingu inda ponnuku nadandadu Existing ina wadihal arasangamum innum oru nadawadikkaiyum adukkawilla iduwarayil hijab pathi. face cover thadaisaiya powadaha than koorapaduhinradu. idu waraikum Srlanka la LTTE kalathil irundu inru warai pooda patta anda tatkolai gundu wedippilum face cover pannikondu waravilla. habaya potu kondu waravilla. appadi irukkum poludu iwarhal veenaha thuweasam kati irukkirarhal. Anda penman marundu wenam andu thirumbi wandirukkalam. polisil murai ittu irukkalam. Ippadi ankulandaiku marundu thara maruthu vittarhal andu. appoludu aadawadu mudiwu kidaithirukkum.

Why no any comments.........still more damages can be expected because of some rowdies in the community and inspired by politicians & some media. we have still enough time to identify the rowdies to produce law enforcement. This should be lead by our ULAMA SABAI and RISHARD, RAUFF, KABEER (Ministers) without considering the social status & supports of rowdies. other wise our ladies have to suffer like this.

Masha allah.may allah bless you.
will serve us in the future
In our country.

நாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு நாம் புத்தி சாதூர்யமாக செயற்படுவதே நல்லது.

அபாயாவும் புர்க்காவும் நிகாபும் இன்றைய சூழலில் நம் சமூகத்தின் மீது மற்றவர்களின் ஆத்திரத்தையும் கோபத்தையும் நிச்சயமாக அதிகரிக்கவே செய்யும். அது இயல்பான ஒரு விடயமே.நாம்தான் புத்திசாதுர்யமாகவும் அவதானத்துடனும் செயற்படவேண்டும்.

முடிந்தவரை வீட்டினுள் இருப்பது நலம். தவிர்க்க முடியாத ஒரு அவசரத் தேவைக்கு வெளியே செல்ல நேரிட்டால் முஸ்லிம் அடையாள ஆடைகளை தவிர்ப்பது சிறந்தது.

அபாயா, புர்க்கா, நிகாப்,நீண்ட ஜுப்பா அணிந்தால் மட்டும் தான் முஸ்லிம் என்று நாம் தவறாக வழி நடாத்தப் படுகின்றோம் என்ற உண்மை விரைவில் நமக்கு புரிந்தால் நல்லது.

இஸ்லாத்தில் கூறப்படாத இந்த முகமூடியை இவள் போன்றவள்கள் போடுவதால்தான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன. இந்த முகமூடுகிறவள்களிடம் ஏதோ ஒரு தவறு நிச்சயமாக இருக்கும். முதலில் இதனைத் தடைசெய்ய வேண்டும்

Post a Comment