Header Ads



ஐதேகவை உடைத்து மற்றொரு, ஆட்சிக்கவிழ்ப்புக்கு தயாராகிறார் மைத்திரி - ரணிலுக்கு ஆப்பு

வரும் நொவம்பர்- டிசெம்பர் மாதங்களுக்குள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, தற்போது ஐதேகவுடன் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும், ஐதேகவின் ஒரு பகுதி உறுப்பினர்களை இணைத்து, 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் திட்டம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இதொகாவின் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமன்றி,  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் ஆதரவு அளிப்பார்கள் என்றும், சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

கடந்த ஒக்ரோபரில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்ட போது, ஐதேக உறுப்பினர்கள் பலரும் சிறிலங்கா அதிபருக்கு ஆதரவு அளிக்க தயாராக இருந்தனர் என்று ஐதேக மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலத்தில் ஐதேகவின் அமைச்சர்கள் சிலரை சிறிலங்கா அதிபர் பாராட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.