April 30, 2019

தீவிரவாத சிந்தனைகளால் கவரப்பட்ட முஸ்லீம், இளைஞர்களுக்கு அவசர உதவி தேவை

நான் ஒரு இலங்கை நாட்டுப் பிரஜை ,பன்மைத்துவ சமூக ஒழுங்கில் முரண்படும் விடயங்களில் விட்டுக் கொடுப்போடும், உடண்பாடான விடயங்களில் ஒன்றினைந்தும் ,நன்மைகளின் மூல கர்த்தாவாகவும் , மனித விரோத காட்டுமிராண்டித் தனமான, மனித இயல்பூக்கம் அங்கீகரிக்காத அத்தனை செயற்பாடுகளுக்கும், சமூக விரோத செயற்பாடுகள் அனைத்துக்கும் பரம எதிரியாகவும் வாழும் நான் ......

இலங்கையை சூழ்ந்திருக்கும் தீவிர வாத ,பயங்கர வாத முகில்களையும் , ஒவ்வொரு இலங்கை பிரஜையினதும் உள்ளங்களில் படிந்திருக்கும் பல கேள்விக் குறிகளுடன் கூடிய அச்ச உணர்வையும் நீக்குவதற்கு சாதாரன இலங்கை முஸ்லிம் பிரஜை என்ற வகையில் நான் என்ன செய்யலாம்?

1.அச்சம் தவிர்ப்போம்.

குறித்த பயங்கரவாதிகளோடு எந்தவிதத்திலும் ,எத்தகைய தொடர்பையும் வைத்திருக்காத நான் ,அவர்களது படு பயங்கரமான செயற்பாடுகளை எதிர்க்கும் நான் ஏன் வீணாகப் பயப்பட வேண்டும் ,

 (என்னையும் பிடிப்பாங்க, உள்ள போடுவாங்க , இப்ப துவேசத்துல சம்பந்தமில்லாம எல்லாரையும் பிடிப்பாங்க, ஊடுகளெல்லாம் செக் பன்னி வேண்டுமெண்டே அது இதுகல வெச்சி பிடிப்பாங்க, போன்கள உள்ள எல்லாதயும் அலிச்சுடு , பயங்கர வாதிகளிடம் காணப்பட்ட இலங்கை அரசியில் முறைமையொன்றில் உத்தியோக பூர்வமாக பதியப்பட்ட , அங்கீகரிக்கப்பட்ட நூல்கள் , மாத இதழ்கள் போன்றவைகளை பத்தவையுங்கள் ............)

இப்படி ஒவ்வொரு நாளும் வீணாக அச்சப்பட்டு , உடைந்து போய் யோசனையில் தடுமாறுவதை விட்டு விட்டு இலங்கை அரசு அவசரகால சட்டத்திற்காக போடப்பட்டுள்ள அனைத்து சட்டங்களையும் சரியாக பின்பற்றி நாட்டையும் , இந்நாட்டு மக்களையும் நேசிக்கும் ஒரு பிரஜை என்ற வகையில் தைரியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .
முஸ்லிம் சிவில் சமூக தலைமைகள் அச்சமூட்டுவதற்கு பதிலாக குறித்த அந்த நிகழ்வில் சம்பந்தப்படாத ஏராலமான அப்பாவி பொதுமக்களை தைரிய மூட்டி ,நம்பிக்கை யூட்டுகின்ற பணிகளில் ஈடுபட வேண்டும் ,குறிப்பாக பின்வரும் விடயங்களில் எப்பொழுதும் விழிப்பாக இருப்போம்.

1.தனது ஆள் அடையாள அட்டையை எப்பொழும் எம்மோடு வைத்திருப்போம்.

2.எனது அடையாளத்தை கேள்விக்கு உட்படுத்தும் எமது பழக்கவழக்கங்களை நாட்டு நலன், தேசிய பாதுகாப்பு,காலக் கடமை என்ற வகையில் கருத்து முரண்பாடுகளை ஒரு பக்கம் வைத்து விட்டு தவிர்ந்து கொள்வோம் (புர்கா, முகம் மூடிய முழுமையான தலைக்கவசம்)

3. வீதி போக்குவரத்து சட்டதிட்டங்களை சரியாக பின்பற்றுவோம் (சிரிய ஒரு பயணமாயினும் , ஊருக்குள்ளாயினும் சரியே தலைக்கவசம் அணிந்து செல்வோம்)

2.ஓங்கி உரத்துச் சொல்லுவோம்

சிறுபான்மை முஸ்லிம், குறித்த ஒரு இயக்கம், குறித்த ஒரு பிரதேசம் போன்ற அனைத்து பலவீன காரணிகளையும் மறந்து ஒரே குரலில் இலங்கை பிரஜை என்ற அடையாளத்தோடு இந்நாட்டில் ஒவ்வொரு பிரஜையினதும் காதுகளை எட்டும் வகையில் நான் பயங்கரவாதத்துக்கும், தீவிர வாத செயற்பாடுகள் அனைத்துக்கும் எதிரானவன் என்பதனை ஓங்கி ,உரத்து சொல்லுவோம், பொது தளங்களான (சாப்பாட்டு கடை ,பேரூந்து, வேலைத் தளங்கள், சமூக வலைத் தளம்) போன்றவைகளில் அரங்கேறும் கதையாடல்களில் பங்கேற்று ,குறித்த பயங்கரவாத அமைப்பின் பின்புலங்களை தெளிவுபடுத்துவதோடு , பயங்கர வாத தாக்குதல்களால் தான் அடைந்து கோண்ட , வேதனை ,மனவருத்தம் , போன்றவைகளையும் பகிர்ந்து கொள்ளும் போது குறித்த பயங்கர வாத தாக்குதல்களின் எதிர்வினையாக வேகமாக பரவிவரும் பேரின வாத பயங்கர வாதத்தை ஆரம்பத்திலையே தடுத்து இந்நாட்டை இன்னொரு அணர்த்தத்திலிருந்தும் பாதுகாப்பதில் ஓரளவு பங்களிப்புச் செய்யலாம்.

3.ஒத்துழைப்போம்

பயங்கரவாத , தீவிர வாத சிந்தனையுடையோரையும் ,கடந்த பயங்கர வாத தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்களையும் சரியாக மூலை முடுக்கெல்லாம் தேடிப் பிடிப்பதல் இந்நாட்டு பாதுகாவளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் பணிக்கு ,இலங்கை முஸ்லீம்கள் என்ற வகையில் ஒத்துழைப்பில் நீதமாக நடந்து கொள்வோம் , 
"வாழுகின்ற சூழலில் "பஸாதை!" தீங்கை ஏற்படுத்தும் கூட்டத்தோடு அவர்களை தடுக்கும் முகமாக வாலேந்திப் போராடும் ஒரு நிலமை தோன்றினாலும் அவர்களுக்கு எதிராக போராடி அமைதியை நிலைநாட்டுவது முதன்மையான மார்க்க கடமை என்ற வகையில் நீதம் இங்கு 2 விதத்தில் வெளிப்பட வேண்டும்

1.தீவிர வாத சிந்தனையால்  கவரப்பட்டிருப்பது தனது தந்தையாயினும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ,இன்னும் பல நூறு அப்பாவி உயிர்களையும் பாதுகாப்பதற்கு புலனாய்வுத் தினைக்களத்துக்கு தெரியப்படுத்துங்கள்...

கொன்று போடுவார்கள், முகவரியில்லாமல் செய்து விடுவார்கள் என்ற சந்தேகப் பயங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் , கலாநிதி ரோகன் குணவர்தன குறிப்பிடுவதைப்போல ,தீவிர வாத சிந்தனைகளால் கவரப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் அவசரமாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு புணர்வாழ்வு ஏற்பாடுகளை செய்து அந்த சிந்தனைகளிலிருந்து மீட்டெடுப்பது குறித்த இந்த பயங்கரவாத சிந்தனைகளை எமது நாட்டிலிருந்து அழித்து விடுவதற்கான ஒரு தீர்வு என்கிறார்..
எனவே பயங்கரவாத ,தீவிரவாத சிந்தனைகளால் பாதிக்கப்பட்டவர்களை புணர்வாழ்வளிப்பதற்கான ( rehabilitation)அத்துனை ஏற்பாடுகளும் எமது அரசிடம் இருக்கின்றன. தமிழ் ஈழ விடுதலைப்புலிகளிடமிருந்து கைது செய்யப்பட்ட பலருக்கு புணர்வாழ்வளித்திருப்பதில் இவ்வரசு  வெற்றியடைந்திருப்பது மெச்சத்தக்கது.

எனவே போராட வேண்டும், ஷகீதாக வேண்டும் ,முஸ்லீம் அல்லாதவர்களை கொள்ள வேண்டும் என்ற கருத்தில் யார் பேசினாலும், செயற்பட்டாலும் நான் அவர்கள் சம்பந்தமான தகவல்களை இந்நாட்டு புலனாய்வுக்கு தெரியப்படுத்துவேன் என்பதில் உறுதியாக இருக்கின்றேன் , அது எனது சொந்த வீட்டிலாயினும் சரியே......

2. சொந்த பகைமைகளை பலிதீர்க்க இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு ,இப் பிரச்சினையில் எவ்வகையிலும் சம்பந்தப்படாதவர்களை அநியாயமாக சம்பந்தப்படுத்த வைத்து மாட்டிவிட்டு அதிலே குளிர் காயத் துடிக்கும் மனோநிலையிலிருந்தும் அல்லாஹ்வை பயந்து அவனிடம் பாதுகாப்பு தேடுவோம்

4.இறைவனை அதிகம் பிராத்தியுங்கள்

இந்நாட்டில் மீண்டும் அமைதியான ஒரு சூழ் நிலையை கட்டியெழுப்ப எமது பிராத்தினைகள் இருவிதமாக அமைய வேண்டும் என நான் நிணைக்கின்றேன்.

1.250க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்களை எந்தவித உரிமையும்,காரணமும் இன்றி, மிலேச்சத்தனமாக காவு கொள்வதில் பங்கெடுத்த அனைவரும் சட்டத்தில் முன்னால் நிறுத்தப்படுவதற்கும் ,நீதமான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும்

2.குறித்த பயங்கரவாத சக்திகளுக்குப் பின்னால் இருக்கும் மறை கரமும் , பின்புல சதிக்காரர்கள் அனைவரும் யார் என்று மக்கள் முன்றத்தில் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்ற வகையிலும் எமது பிராத்தனைகள் அமைய வேண்டம்

"இறைவா இந்நாட்டை அமைதி மிகுந்த நாடாகவும் , இந்நாட்டு மக்களின் பொருளாதாரம் , அரசியல் நிலமைகள் அனைத்திலும் சீரடைந்த அருள்பாளிக்கப்பட்ட பூமியாகவும் மாற்றி விடு வாயாக ...."

அஷ்ஷெய்க் ஹுஸ்னி ஹனீபா (நளீமி)

3 கருத்துரைகள்:

First we have to tell these all advise to Asaath Saali...
As I saw his interview yesterday in derana TV he is showing that he is the only one is the good one in this country and all other parties (who r against to Kabr warship) are terrorists....
Also he blames PJ, SLTJ, CTJ, UTJ.....and others... He tried to hid these all parties were fighting against terrorism with speech, Banners, Posters and complains against those NTJ. He and his president avoid those complains but now showing as Mufthi of Anti-Terrorism.
How he forget all these....and he is the first enemy of Muslims

Ok நாட்டுக்கான சமூ
கத்திற்கான சிறந்த
செய்திகள் இவை.
இயக்கங்கள் சார்பான
மதவழிகாட்டல்களை
நினைக்கும்போது
இன்நாட்டில் வாழமுடி
யுமா எனும் பயம்
உண்டாகிறது.எனவே
நவீன இயக்க சிந்த
னைக்கு இடமில்லாது
சட்டரீதியாக அனைத்
தும் தடைசெய்யப்பட
ல் வேண்டும் என்பத
னையும் குறிப்பிடுங்
கள்..

With wahabism all this radical came into Sri Lanka. Ban all wahabi groups. oil money destroyed us all.

Post a comment