Header Ads



குளத்தில் மாட்டை, குளிப்பாட்டியவரை முதலை பிடித்தது - எப்படி தப்பித்தார் தெரியுமா..?

குளத்தில் மாட்டை குளிப்பாட்டிக்கொண்டு இருந்தவரை முதலை கடிதத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம், மட்டுவில் கிழக்கை சேர்ந்த நாகநதி கிருஷ்ணமூர்த்தி (வயது 58) என்பவரே படுகாயமடைந்தவராவார். 

குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள வயல் குளத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாடுகளை குளிப்பாட்டிக்கொண்டு இருந்த வேளை குளத்தில் இருந்த முதலை அவரது தொடை பகுதியை கெளவி பிடித்துள்ளது.

உடனே விரைந்து செயற்பட்ட அவர் முதலையின் தாடை பகுதியை கைகளால் இழுத்து பிழந்து முதலையை தூக்கி குளத்திற்கு வெளியே வீசியுள்ளார். 

அதன் பின்னர் தொலைபேசி ஊடாக உறவினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனை அடுத்து அங்கு விரைந்த உறவினர்கள் அவரை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

No comments

Powered by Blogger.