Header Ads



முஸ்லிம் பெண்கள் புர்காவை அணியாமல் விடுவதற்கு, இஸ்லாமிய தலைவர்கள் வேண்டுதல் விடுக்க வேண்டும்


கொழும்பு 7 பௌத்தலோக மாவத்தையில் உள்ள அகில இலங்கை பௌத்த காங்கிரஸ்  அலுவலகத்தில் ்கடந்த ஞாயிறு நடைபெற்ற பயங்கர வாத தாக்குதல் சம்பந்தமாக சர்வமதத் தலைவா்க் இணைந்து ஊடகவியலாளா் மாநாடொன்றை  இன்று (28) பி.பகல் 3.00 மணிக்கு நடாத்தினாா்கள்.

இவ“ ஊ்டக மாநாட்டினை கலாநிதி ஒமல்பே சோபித்த தேரா் தலைமையில் நடைபெற்றது.  இவ் ஊடக மாநாட்டில் சகல மதத் தலைவா்களும் மெழுகுவாத்தி ஏற்றி உயிா் நீத்தவா்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினாா்கள்.  கலாநிதி இத்பான்கே தம்மலங்கார தேரா்  கிரிஸ்த்துவ மதத்தின் சாா்பில்  மல்கம் கார்டினா் ரன்ஜித் ்ஆண்டகை,  இந்து மதத்தின் சாா்பில்  சிவசிறி கு.வை. க வைத்தீஸ்வர குருக்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவா் அஸ்சேக் றிஸ்வி முப்தி,  அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவா் ஜகத் சுமதிபால ஆகியோறும்  கலந்து கொண்டு கருத்துக்களைத்  தெரிவித்தனா்.

இங்கு கருத்து தெரிவித்த  இதபான்கே தம்மலங்கார தேரா் 

 இந்த நாட்டில்  கடந்த கால யுத்தில் இருந்து மீண்டுள்ள இலங்கை மீண்டும் ஒரு பாதாள உலகத்திற்கு கொண்டு செல்லாமல் மத ரீதியாக சகல மதத் தலைவா்களும் ஒன்று கூடி இந்த பயங்கரவாத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும். அதற்காக இந்த நாட்டில் உள்ள பாதுகாப்புப் படையினருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதில் முஸ்லிம் பெண்கள் அணியும் முக மூடி புர்காவை அணியாமல் விடுவதற்கு  இஸ்லாமிய மாா்க்கத் தலைவா்கள் வேண்டுதல் விடுக்க வேண்டும். மற்றது இந்த நாட்டில் சிறந்த பாதுகாப்புதுறையில் தோ்ச்சி பெற்ற சி.ஜ்.டி யினா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு அரசாங்கம் பொதுமண்னிப்பு வழங்கி அவா்களை விடுவித்தல் வேண்டும். என வேண்டிக் கொண்டாா்.

(அஸ்ரப் ஏ சமத்)

No comments

Powered by Blogger.