Header Ads



லீடர் பதவி கேட்டார் சஜித் – இணங்க மறுத்தார் ரணில்

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச முன்வைத்த நிபந்தனை ஒன்றின் காரணமாகவே – அதிருப்தியுற்ற நிலையில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்ததாக நம்பகரமாக அறியமுடிந்தது.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றால் இப்போதுள்ள கட்சியின் யாப்பின்படி கட்சியின் தலைமைப் பதவி தமக்கே வழங்கப்படவேண்டுமென சஜித் பிரேமதாச முன்வைத்த கோரிக்கையினை கட்சியின் தலைவர் ரணில் ஏற்றுக் கொள்ளவில்லையெனவும் கட்சியின் தலைமைப்பதவி குறித்து நிபந்தனைகளை முன்வைக்க முடியாதென்பது ரணிலின் நிலைப்பாடு என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த தனது பிறந்த தினத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தனது தீர்மானத்தை வெளியிட்டிருந்தார் ரணில். அதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் விசேட விருதை மாநாயக்க தேரரிடம் பெற்ற சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது செயற்பாட்டை ஆரம்பித்தார்.

தமிழன்

No comments

Powered by Blogger.