Header Ads



முஸ்லிம்களை சந்தேகிக்க கூடாது, முஸ்­லிம்கள் முழு­ ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி வரு­கின்­றனர்

நாட்டில் உள்ள முஸ்­லிம்­களை சந்­தேகக் கண்ணில் பார்க்கும் செயற்­பா­டு­களை கைவிட வேண்டும். இது குறித்த விசா­ர­ணையில் முஸ்­லிம்கள் முழு­மை­யான ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி வரு­கின்­றனர் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விசேட அமர்­வு­களின் போது உரை­யாற்­றி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது­கு­றித்து அவர் மேலும் கூறு­கையில், 

மிகவும் அமை­தி­யாக வாழ்ந்­து­வந்த எமது நாட்­டினை ஒரு குறு­கிய பயங்­க­ர­வாத அமைப்­பினால் நாச­மாக்­கப்­பட்­டுள்­ளது. அதுவும் ஒரு புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இவ்­வா­றான நாச­கார செயற்­பாடு இடம்­பெற்­றுள்­ளது. தேவா­ல­யங்கள், ஹோட்­டல்கள் இலக்­கு­வைக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் பல பொது­மக்­களை நாம் இழந்­துள்ளோம். இவர்கள் அனை­வ­ருக்கும் எமது அனு­தா­பங்­களை தெரி­விக்­கின்றோம்.

அதேபோல் இவ்­வா­றான செயற்­பாடு கார­ண­மாக நாட்டில் உள்ள முஸ்­லிம்­களை சந்­தேகக் கண்ணில் பார்க்கும் செயற்­பா­டு­களை கைவிட வேண்டும். இது குறித்த விசா­ர­ணையில் முஸ்­லிம்கள் முழு­மை­யான ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி வரு­கின்­றனர். ஆகவே இன­வாதம், மத­வாதம் ஆகி­ய­வற்றை கைவிட வேண்டும்.

1 comment:

  1. கொலையாளிகளை முஸ்லிம்கள் மிகவும் வெறுக்கின்றனர். தவறான நடவடிக்கைகள் மூலம் புதிதாக ஆத்திரம் கொண்டோர் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.