Header Ads



இலங்கையில் வெப்பக் காற்று, வீசலாமென எச்சரிக்கை

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் நாளை அனல் காற்று வீசுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கடும் வெப்பமான காலநிலை நிலவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

38 தொடக்கம் 40 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் பல பாகங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சோர்வு, களைப்பு என்பனவற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு பொது மக்கள் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடமேற்கு, வட மத்திய, கிழக்கு மாகாணம், கம்பஹா, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1 comment:

  1. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
    (அல்குர்ஆன் : 41:39)

    ReplyDelete

Powered by Blogger.