Header Ads



குருநாகலில் சகல பகுதிகளிலும், ஜும்ஆத் தொழுகை இடம்பெற்றது.


குருநாகல் மாவட்டத்தில், பொலிஸார்  மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் பாதுகாப்புடன் முஸ்லிம்களின்  ஜும்ஆத் தொழுகை இடம்பெற்றது.

குருநாகல் நகர் மற்றும் முஸ்லிம்கள் வாழும்  பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை ஜும்ஆப் பயான்கள்  20 நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்தி சகல பள்ளிவாசல்ளிலும் தொழுகை  நிறைவேற்றப்பட்டு  அமைதியுடன் மக்கள் வீடு திரும்பினர்.

நாட்டின் தற்போதைய சூழலில்  முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம்,  அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா வழங்கிய வழிகாட்டலின் கீழ் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும், இமாம்களும் அதிக கவனம் செலுத்தி தொழுகையை நிறைவு செய்தனர்.

அதேவேளை ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் பல்லின மக்கள் வாழும் நாட்டில் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வு மலரவும் நாட்டில் சுபீட்சம் அபிவிருத்தியும் உருவாகவும் பாதிக்கப்பட்ட அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும் என்ற தூஆப் பிரார்த்தனை விசேடமாக இடம்பெற்றது.

குருநாகல் மாவட்டத்தில், குருநாகல் நகர், தெலியாகொன்ன, பறகஹதெனிய மல்லவப்பிட்டிய உள்ளிட்ட  எல்லாப்  பிரதேசங்களிலும் ஜும்ஆத் தொழுகை மிக அமைதியாக இடம்பெற்றது.

- இக்பால் அலி -

2 comments:

  1. நாடு விரைவில் வளமைக்குத் திரும்ப பிரார்திக்கிறேன். இன்று தமிழரதும் மலையகதமிழரதும் புலம்பெயர்ந்த தமிழரதும் சிங்கள ஜனநாயக சக்திகளும் அரவணைப்பும் ஆதரவும் முஸ்லிம் மக்களுக்குத் தேவை. முஸ்லிம் ஜனநாயக சக்திகளின் வெற்றி மட்டுமே ஈஸ்டர் 2019 நெருக்கடிகளின் தீர்வுக்கும் தமிழ் முஸ்லிம் உறவுக்கும் வழிவகுக்கும் விடையாகும்

    ReplyDelete
  2. In Mallawapitiya and Theliyagonna, Jumma was not held as per the instructions of ACJU.
    Fawzan...Mallawapitiya

    ReplyDelete

Powered by Blogger.