Header Ads



பூஜித்த ஜயசுந்தரவை, வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பதவியில் இருந்து நீக்கப்படலாமென அரச உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று, ஜனாதிபதி -பிரதமர் – சபாநாயகர் இது தொடர்பில் ஒரு முடிவை எடுப்பார்களென அறிய முடிகின்றது.

கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே ஏற்பட்டதென்றும் அதனை பொறுப்பேற்று பூஜித்த பதவி விலக வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்ரி நேற்று கேட்டுள்ளதாக தகவல்.

இதற்கிடையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் உத்தரவடங்கிய வர்த்தமானி மொழிபெயர்ப்பு பிரச்சினை காரணமாக நேற்று நள்ளிரவு வெளியாகவில்லை.ஆங்கில வர்த்தமானி மட்டுமே வெளியாகி இருந்தது.சிங்கள மொழி வர்த்தமானியே உத்தியோகபூர்வமானதென்பதால் இன்று நண்பகலே அது வெளியாகுமென சொல்லப்படுகிறது. நேற்று இரவு முதல் அவசரகால நிலை அமுலுக்கு வருமென சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் முக்கிய சில அரசியல்வாதிகளின் உறவினர்களது வீடுகள் நேற்றிரவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை அனுமதியின்றி தங்கியிருந்த 9 பாகிஸ்தானியர்கள் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். TN

1 comment:

  1. இவன் பொலிஸ்மா அதிபராக இருக்க தகுதியே இல்லாதவன். இவனுடைய காலத்தைபோல் இலங்கையில் இப்படி குற்ற செயல்கள் இடம்பெற்றதில்லை

    ReplyDelete

Powered by Blogger.