April 23, 2019

முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு விண்ணப்பம்,, இனிச் செய்யக்கூடியது என்ன...?

- வ.ஐ.ச.ஜெயபாலன் -மட்டக்களப்பு கொச்சிக்கடை நீர்கொழும்பு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் உல்லாச பயணிகள் விடுதிகள் மீதும் நடந்த தாக்குதல்கள்பற்றி இலங்கை அரசு அறிந்திருந்தது. ஜனாதிபதி பிரதமர் மோதலில் சீரழிந்திருக்கும் இலங்கை அரசு தடுத்திருக்கக்கூடி இந்த ப்படுகொலைகளை ஏன் அனுமதித்தது?
.
உள் மோதல்களால் சீரழிந்துள்ள இலங்கை அரசு அரசு உண்மையில் 2009ல் உள்நாட்டுப்போர் முடிவடைந்த கையோடு மேற்படி மத அடிப்படை வாதிகளை முளையில் கிள்ளக்கூடிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துவிட்டது. எனினும் அடிப்படைவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்டு பேரழிவை ஏற்படுத்தி மக்களுக்களதும் சர்வதேச சமூகத்தினதும் கோபத்தை பெறட்டுக்கும் என அரசு காத்திருந்தது. 2013ல் இலங்கைச் சிறையில்தான் என் முடிவு என கோத்தபயாவால் தடுப்புக் காவலில் வைக்கபட்டிருந்தபோது அதிகாரிகளின் பேச்சுகளில் இருந்து சில திடுக்கிடும் தகவல்களை அறிந்தேன். அதன் அடிப்படையில் நான் அறிந்தவை அதிற்ச்சி தருபவை. அரசுக்கு பெளத்த மத அடிப்படைவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக 1915ல் நிகழ்த்திய இனக்கலவரத்தின் நூற்றாண்டான 2015ஐ முஸ்லிம்களின் இரத்தத்தால் கொண்டாடும் கொலைகார திட்டமொன்று இருந்ததை அறிந்தேன். சர்வதேச நெருக்குதல்களால் விடுதலை செய்யபட்டதும் இதுபற்றி எச்சரித்தேன். அன்றைய அரசுக்கு முஸ்லிம் அடிப்படைவாத தாக்குதல்களைத் தூண்டி இடம்பெறச் செய்து எதிர் நடவடிக்கையாக பெருமழவிலான வஹாபி சார்பு இளைஞர்களை கொலைசெய்யும் திட்டம் இருந்ததை அறிந்து அதிற்ச்சி அடைந்தேன். ஆனால் அதிஸ்ட்டவசமாக 2015ன் முன் தேர்தலும் அரசு மாற்றமும் இடம்பெற்றுவிட்டது.

புதிய அரசும் அடிபடை வாதிகள் பற்றிய தகவல்களை முழுமையாக வரித்திருந்தது. ஆரம்பத்திலேயே தலையிட்டிருந்தால் அனர்த்தங்களை தடுதிருக்கலாம். அடிப்படைவாதிகளின் பிடியில் இருந்த அப்பாவி இளைஞர்களையும் மீட்டிருக்கலாம். இன நல்லிணகம் பேசி பதவிக்கு வந்த அரசு ஏன் உடனடியாகச் செயல்படாமல் அடிபடை வாதிகள் வளர அனுமதிதது?

அடிபடை வாதிகளை அரசு ஏன் வளர விட்டது. கைது செய்யபடுகிறபோதெல்லாம் முஸ்லிம் தலைவர்கள் தலையிடும்வரைக்கும் காத்திருந்து தலைவர்களின் பரிந்துரையோடு ஏன் அடுத்தடுத்து விடுதலை செய்தது?

இது ஒருகல்லில் இரண்டு மாங்காய் உத்திதான். இப்ப நடந்திருப்பதுபோன்ற படுகொலை ஒன்றை த அரங்கேறவைத்து தாக்குதல்களின்பின் அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தி அடிபடை வாத இயக்கங்களை அழித்து சிங்கள வீரர்களாகி தேர்தலை சந்திக்கிற திட்டம் தான் இதற்கான காரணம். முன்னைய அரசு இதனைத்தான் 2016ல் செயற்படுத்த நினைத்தது.

இன்னுமொரு கல்லில் இன்னும் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டமும் அரசுகளுக்கு இருந்தது. அது அவசர நிலையை பிரகடனபடுத்தி அடிப்படை வாதிகளை தூண்டி அழிக்கும் சமயத்தில் அடிபடைவாதிகளை சந்திதோ உதவியோ இருக்கக்கூடிய முஸ்லிம் தலைவர்களை மிரட்டிப் பணியவைபதாகும். இத்தகைய திட்டங்கள் எல்லாம் தயாராக இருந்தபோதும் சிங்கள வீரன் பட்டத்தை எப்படி பகிர்வது என்பதுபற்றி ஒற்றுமை ஏற்படவில்லை. அத்தகைய ஒரு சமரசத்துக்கு வல்லரசு எசமானர்களும் அனுமதிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இதனால்தான் ஒரு தசாப்தங்களாகளுக்கும் மேலாக அடிப்படைவாத அமைப்புகளைக் கண்காணித்தும் தகவல்கள் சேகரிபதும் அவ்வப்போது அடிபடைவாதிகளைக் குற்றச்சாட்டுகளில் கைது செய்வதும் பின் முஸ்லிம் பிரமுகர்கள் தலையிடுகிறபோது விடுதலை செய்வதும் என ஒரு நாடகம் நடந்துவந்தது. இது முஸ்லிம் பிரமுகர்களை மாட்டக்கூடிய பைல்களை உருவாக்குவது அதனடிபடையில் அவர்களை பிளாக் மெயில் பண்ணி பணியவைத்துக் கட்டுப்படுத்துகிற அரசின் தந்திரோபாயம்தான்.
2013ல் இருந்து முஸ்லிம் பெற்றோருக்கு கண்ணை மூடிக்கொண்டிருக்கவேண்டாம் உங்கள் பிள்ளைகளை வழிதவற வைக்கும் முயற்சிகள் சில இடம்பெறுகிறது. உங்கள் பிள்ளைகளைகளைக் காப்பாற்றுங்கள் என வேண்டுதல் வைத்துக் கொண்டே இருந்தேன். இதற்காக எனக்கு காபீர் முனாபிக் பட்டங்களும் வளங்கபட்டிருக்கு,

இனியாவது முஸ்லிம் மக்கள் விழித்துக் கொள்ளவேண்டும். வீடுகளில் அடிப்படை வாதத்தின் ஆபத்துப் பற்றிய விழிப்பற்ற சூழலும் தவறான மதரசாக்களும்தான் அடிபடைவாத சொற்பொழிவுகளும்தான் பிள்ளைகளை மூளைச் சலவை செக்குள்ளாகி வழிதவற வைக்கிறது. காபீர்களை கொன்றால் சுவர்க்கமும் தேவகன்னியர்களும் காத்திருப்பார்கள் என்கிற அபத்தங்களை நம்பி இளைஞர்கள் வழிதவறுகிற சூழலின் ஆரம்ப புள்ளிகள் இவைதான்.

பெற்றோர்களே சிவில்சமூக தலைமைகளே பள்ளிவாசல் அமைப்புகளே செயல்படாமல் இருபதைவிட தாமதமாகச் செயல்படுவது சிறந்தது. உங்கள் பிள்ளைகளை நீங்கள் காப்பாற்றினால்தான் உங்கள் இனத்தை இறைவன் காப்பாற்றுவான். .,  

7 கருத்துரைகள்:

உலகறிவற்ற பல சமய உபன்னியாசம் செய்வோர் இதற்கு முழு முழுக் காரணம் ஐயா.

Dear Jeyabaalan, nallathor upathesam. Nanri.

Always your articles and points are 100% true, but still our community in deep sleep, please continue your duty, it’s May be changed somebody, thank you sir,


பெற்றோர் மீது குற்ற‌ம் சாட்டும் ஜ‌ய‌பால‌னின் க‌ருத்து ய‌தார்த்த‌துக்கு மாற்ற‌மாகும். இன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் ந‌வீன‌ ச‌மூக‌ வ‌லைய‌த்த‌க‌ங்க‌ளுள் சிக்குண்டு கிட‌க்கின்ற‌ன‌ர். பெற்றோருக்கு தெரியாம‌ல் இர‌வில் ப‌டுக்கையில் நெட்டில் உலாவ‌ருகின்ற‌ன‌ர்.
இது முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் ம‌ட்டும‌ல்ல‌, ஏனைய‌ ச‌மூக‌த்த‌வ‌ரும்தான். அத்துட‌ன் முக‌நூல் போன்ற‌வ‌ற்றில் மிக‌ மோச‌மான‌ இன‌வாத‌ க‌ருத்துக்க‌ளை ப‌ர‌வ‌ விடுகிறார்க‌ள். குறிப்பாக‌ இஸ்லாம் ப‌ற்றியும் அள்ளாஹ், ந‌பி, முஸ்லிம்க‌ள் ப‌ற்றியும் மோச‌மான‌ நையாண்டி வார்த்தைக‌ளை ப‌ர‌வ‌விடுகிறார்க‌ள். இது எந்த‌ முஸ்லிம் இளைஞ‌னின் உண‌ர்வையும் தூண்ட‌ச்செய்யும்.

இத‌னால்த்தா ப‌ல‌கால‌மாக‌ சொல்லிவ‌ருகிறோம் இன‌வாத‌ தூஷித்த‌ல் க‌ருத்துக்க‌ளுக்கெதிராக‌ த‌ண்ட‌னைச்ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ர‌ வேண்டும் என‌.

இப்ப‌டியான‌ வார்த்தைப்பிர‌யோக‌ங்க‌ள் ம‌னித‌ ம‌ன‌ங்க‌ளில் விர‌க்தியையும் வெறுப்பையும் ஏற்ப‌டுத்துகின்ற‌ன‌. இதுவெல்லாம் பெற்றோருக்கு தெரிய‌ வாய்ப்பில்லை.

மேலும் எந்த‌ ப‌ள்ளிவாய‌லிலும் காபீர்க‌ளை கொல்லுங்க‌ள் என்றோ, அப்பாவி காபீர்க‌ளை கொன்றால் சொர்க்க‌ம் கிடைக்கும் என்றோ சொல்ல‌ப்ப‌டுவ‌தில்லை. இது ஜ‌ய‌பால‌னின் அபாண்ட‌மான‌ க‌ருத்தாகும். அவ்வாறு ப‌ள்ளியில் அல்ல‌து ம‌துர‌சாவில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ ப‌கிரங்க‌மான‌ ஒரு க‌ருத்தை ஆதார‌மாக‌ காட்ட‌ ஜ‌ய‌பால‌னால் முடியுமா?

முஸ்லிம் வாலிப‌ர்க‌ள் தீவிர‌வாத‌ சிந்த‌னைக்குள் ஆட்ப‌ட்டு விட‌க்கூடாது என்ப‌தில் பெற்றோர்க‌ளும் உல‌மாக்க‌ளும் மிக‌க்க‌வ‌ன‌மாக‌ இருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளின் பிர‌சார‌ங்க‌ள் ச‌கிப்புத்த‌ன்மையையே வ‌லியுறுத்துகின்ற‌ன‌.

அதே வேளை 83ம் ஆண்டு க‌ல‌வ‌ர‌ம் கார‌ண‌மாக‌ எவ்வாறு த‌மிழ் இளைஞ‌ர்க‌ளில் விர‌க்தியுற்றார்க‌ளோ அது போல் இல‌ங்கையில் ந‌ட‌க்கும் மிக‌ மோச‌மான‌ இன‌வாத‌ம் கார‌ண‌மாக‌ விர‌க்திக்குள்ளாகியிருக்க‌வும் கூடும்.
த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் ஆயுத‌ம் தூக்கிய‌மைக்கு பெற்றோர் அவ‌ர்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்த‌வில்லை என‌ சொல்ல‌ முடியுமா?
ந‌வீன‌ தொலை சாத‌ன‌ம் இல்லாத‌ அந்த‌க்கால‌த்திலும் த‌மிழ் பெற்றோரால் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடிய‌வில்லை. இப்போது முழு உல‌கும் ந‌ம‌து வீட்டுள், பிள்ளைகளின் ப‌டுக்கைய‌றைக்குள் வ‌ந்த‌ நிலையில் எப்ப‌டி கட்டுப்ப‌டுத்துவ‌து?

இவ‌ற்றை க‌ட்டுப்ப‌டுத்த‌ அர‌சு பின் வ‌ரும் விட‌ய‌ங்க‌ளை கொண்டு வ‌ர‌லாம்.
முக‌நூலை, வ‌ட்ச‌ப்பை த‌டை செய்த‌ல். வி பி என் மூல‌மும் முடியாத‌ அள‌வு த‌டை செய்த‌ல்.

இன‌வாத‌ பேச்சை பேசும் அர‌சிய‌ல்வாதிக‌ள், ம‌ற்ற‌வ‌ர்க‌ளை த‌ண்டிக்கும் ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ர‌ல்.

இன‌ ஐக்கிய‌த்தை உருவாக்கும் க‌ருத்தர‌ங்குக‌ளை ந‌டாத்துத‌ல்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

முஸ்லிம்களை அரசாங்கம் தான் இனை மேல் கட்டுப்படுத்த வேண்டும். பெற்றோரால் முடியாது.

Mubarak avargale neer muslim parents ku enna soola vaareer ?? ungal pillaigal virakthi yutru irukiraarkal athanaal avargali ippadi anupi vaiyugal enraa Jayapalan sollum karuthai neer thavaraaga purinthu kondulleer athu thavira intha thaakuthalai neer aatharipathu pol terikirathu..virakthiyutraal thookula thonga sollum allathu nanju kudithu saaga sollum ippadi appavi uyirkalai kaavu kolla va islam solli kodhiruku ...ithan pinnar ippadi arikai viteero....umakkum aapu varum ...muslim petror pillaigalai olungaaga valarkavillai enbathai neer maruthaal appo ibrahim nda pillaigal thaan ithai seithaarkal ippo ibrahim hajiyum kambi ennuraan ...avan naasamaa poga pillaigala ippadi poga avanum oru kaaranam ....panam kidaithaal muslim kal ellathaiyum vippanungal ...Kalapadam..Brand Maathurahurathu..Duty kattama kalla thanam seirathu..TEA businessla ethanai kalapadam.. aniyaayam seiranungal ...kadathal..kudu business...kanja business ..ithukellam kaaranam petrorum thaan ...olungaana kalviya kodukrathu illa...arapadippu ...sobana vaalka ...petrorukku kattupadutha mudiyaatha pillaigala irunthaa athu petror da weakness thaan..rooma moodi pillai enna seithu enru paarka mudiyaatha petrorukku enna solvathu ...???inraiku mulu samoogame kevalapattu ...yaar kitteyum mugam koduka mudiyaama thavithu kondirukku...neer viyakiyanam pesureer..ippo poi karutharangu vaiathall ummai serupaal maatumalla enthaal adipanungalo theriyaathu ...eelai muslim kal anradam pilaithu thinna kooda vali illama ippp ethanaiyo oorgalil thavippathu umakku theriyuma ???neerum intha iyakathil ullavano theriyathu ...???

Post a Comment