Header Ads



முஸ்லிம்களோடு கிருஸ்தவர்களின் சிலுவை யுத்த, முக்கிய தளமாக பிரான்ஸின் நோட்ரிடேம் ஆலயம்


பிரான்ஸின் நோட்ரிடேம் ஆலயம் (Notre Dam cathedral)  தீப்பற்றி எரிந்தது உலகத்தை கவலை அடைய வைத்தது. 

ஐரோப்பாவில் பழம் பெரும் கிருஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான நோட்ரிடேம்  1160 ஆம் ஆண்டு மௌரீஸ் டீ சுல்லி என்கிற பிஷப்பினால் நிர்மாணிக்கப்பட்டு பெருப்பிக்கப்பட்ட இந்த ஆலயம் நெப்போலியன் பதவி ஏற்றமை ,அழகிய புராதன கட்டடக்கலை , பிரான்ஸின் வரலாறு என பல விடங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது .

அநேகர் அறிந்திராத இன்னொரு விடயத்துக்காகவும் இது பிரபலம் பெறுகிறது. முஸ்லிம்களோடு ஐரோப்பிய கிருஸ்தவர்கள் செய்த மூன்றாவது சிலுவை யுத்தத்தின் முக்கிய தளமாக இது கருதப்படுகிறது.

1187 ஆம் ஆண்டில் சுல்தான் ஸலாஹுதீன் அய்யூபி தலைலைமையிலான படைகள் ஜெரூசலத்தை கைப்பற்றியதை அடுத்து ஐரொப்பா முழவதும்  முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.கிருஸ்தவ ஐரோப்பாவுக்கு காட்டுத்தீயாக இந்த செய்தி பரவுகின்றது. போப் மூன்றாவது ஏர்பன் இந்த செய்தியை கேள்வியுற்று மூர்ச்சையுற்று மரணம் அடைகிறார் .

புனித ஜெரூசலத்தை கைப்பற்றும் நோக்கிலே தமக்குள் இருந்த தொடர்ச்சியான யுத்ததை இங்கிலாந்தின் மன்னர் இரண்டாவது ஹென்றியும் பிரான்ஸின் மன்னர் இராண்டாவது பிலிப்பும் முடிவுக்கு கொண்டு வருகிறார்கள் .ஹென்றியின்  மரணத்துக்கு பின்னர் இங்கிலாந்தில் ஆட்சி பீடம் ஏறிய மன்னர் முதலாவது ரிச்சர்ட்  (Richard the lion heart ) ஜேர்மனிய மன்னர் பிரடரிக் பாபரோசாவையும் சேர்த்துக்கொண்டு ஐரோப்பா முழுவதிலும் இருந்து சிலுவை யுத்தத்துக்கு தயாராகிறார்கள். 

பிரமாண்டமான படைகள் சிலுவை யுத்தத்துக்கு செல்லுவதற்கு முன்னர் கிருஸ்தவ வணக்க வழிபாட்டில் ஈடுப்பட்ட இடம் இந்த நோட்ரிடேம் ஆலயமே.
இதே ஆலயத்தில்தான் போப் கிரகொரி VIII சிலுவை யுத்தத்துக்குக்கான கட்டளையையும் ,கிருஸ்தவ சொற்பொழிவையும் ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜி-



1 comment:

  1. The Golden Era of Muslim world witness the GREAT MOSQUE OF ALEPPO, signifies the great Khalid Ibnu Waleed and the companions those who sacrifice life for the ISLAMIC DYNASTY. Now what happened, these all destroyed and their innocence people killed by Bashar Azard and his companion.

    ReplyDelete

Powered by Blogger.