Header Ads



இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் – ஸ்பெஷல் ரிப்போர்ட் !

இன்று காலை இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகளை செய்ய அவசர தலைவர்கள் கூட்டத்தை இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டியுள்ளார் பிரதமர் ரணில்.

தாக்குதல்கள் பல தற்கொலைத் தாக்குதல்கள் எனவும் ஷங்கிரி லா ஹோட்டலில் நடந்த தாக்குதலில் வெளிநாட்டு பிரஜை ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

நாட்டின் கேந்திர நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று மாலை நடைபெறவிருந்த ஆராதனைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வெளிநாட்டு இராஜதந்திரிகள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .

வெடிப்பு நடந்த இடங்களில் பரபரப்போடு கொள்ளைச் சம்பவங்களும் நடந்துள்ளன.

தேசிய வைத்தியசாலை 46 பேர் உயிரிழப்பு – 259 காயம்
களுபோவில வைத்தியசாலை 17 காயம்
நீர்கொழும்பு வைத்தியசாலை 74 பேர் உயிரிழப்பு -113 காயம்
கட்டான – கட்டுவப்பிட்டி 31 உயிரிழப்பு
ராகம வைத்தியசாலை 7 உயிரிழப்பு 30 காயம்
மட்டக்களப்பு 27 உயிரிழப்பு 80 காயம்

ஷங்கிரி லா ஹோட்டலில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் பிரபல சமையற்கலை நிபுணர் ஷாந்தா மாயாதுன்ன மற்றும் அவரின் புதல்வி பலி

பாராளுமன்றம் அவசரமாக செவ்வாய்க்கிழமை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
.
கொழும்பில் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாமென முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் மனோ கணேசன் சற்றுமுன் ட்வீட்டரில் தெரிவித்திருந்தார்.

இப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி மக்கள் அமைதிகாக்க வேண்டுமென குறிப்பிட்டார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் ரணில், பொருளாதாரத்தை சீர்குலைக்க செய்யப்பட்ட வேலை இதுவென்று குறிப்பிட்டதுடன் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படுவார்களென குறிப்பிட்டார்.

TN

No comments

Powered by Blogger.