Header Ads



தாய் நாட்டுக்கு எதிரான எந்தவொரு சக்தியையும், எதிர்த்து நின்று போராட வேண்டும் - கோத்தபாய

இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் வீழ்ச்சி பெரும் கவலையளிப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி புலனாய்வுப் பிரிவுகளுக்கு தரம் குறையாத புலனாய்வுப் பிரிவு கட்டமைப்பினை கொண்ட இலங்கை புலனாய்வு பிரிவு கண் எதிரிலேயே இழிவுபடுத்தப்படுவதனை கண்டு கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

இலங்கையில் இடம்பெற்ற இந்த கோழைத்தனமானதும், மிலேச்சத்தனமானதுமான குண்டு தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடும்போக்குவாத தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டு கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

சேதமாக்கப்பட்ட தேவாலயங்கள் மற்றும் ஏனைய சொத்துக்களை புனரமைத்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து இன, மத மக்களும் கௌரவமான முறையில் வாழக்கூடிய ஓர் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய முதன்மைப் பொறுப்பு எமக்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

தாய் நாட்டுக்கு எதிரான எந்தவொரு சக்தியையும் எதிர்த்து நின்று போராட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. ஆகவே என்னை ஜனாதிபதியாக்குங்கள் உங்களின் திட்டங்கள் நன்றாக நிறைவேற்றப்படுகின்றன!ஏன் இந்த நிகழ்வுகள் நீங்கள் அமெரிக்காவிட்கு சென்றுவந்தபின் இந்த கொடூரங்கள் நிகழ்தப்படுகின்றது புலனாய்வு பிரிவு எச்சரித்தும் பொறுப்புதாரிகள் அழட்சியம் செய்த இரகசியங்கள் என்ன? பொம்புகள் வெடித்தவுடன் அமெரிக்கா இலங்கைக்கு உதவியை அறிவித்ததின் இரகசியங்கள் என்ன? இலங்கையுடன் பல ஆயிர ஆண்டுகளாக உறவு வைத்துள்ள வல்லரசு சீன நாட்டை ஏன் அமெரிக்க இலங்கையை விட்டு துறத்த முயற்சிக்கின்றது
    isis தீவிரவாதிகளுக்கு அவர்களின் கூட்டம் அல்லாத அனைவரும் எதிரிகள்தானே
    ஏன் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டும் பொம்புகளை வெடிக்க வைத்தார்கள் இவ்வாறு பலகேள்விகள் நம் நாட்டு அரசியல்வாதிகளிம் கேட்க வேண்டியுள்ளது.
    மன்னார் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள Gas,Petrol கிணறுகளை அடைவதற்கு அமெரிக்கா எப்போது முடிவு செய்த்தது அந்த ஆசையின் வபிரதிபலன்கள்தான் இந்த கொடூரச்செயல்கள்? ___

    ReplyDelete
  2. சிறப்பான கருத்துக்கள் ரியால்

    ReplyDelete

Powered by Blogger.