April 17, 2019

பிரான்சில் தேவாலய தீ சுவாலைக்குள், இயேசுநாதர் தோன்றினாரா...?


பிரான்ஸ் நாட்டின்  தலைநகரான பெரிஸ் நகரின் முக்கிய கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் நேற்று முன் தினம் இரவு பாரிய  தீ விபத்தொன்று  இடம் பெற்றது தெரிந்ததே. அதன்  போது இயேசுநாதர் தீ பிளம்பிற்குள்ளே தோன்றி ஆறுதல் அளித்ததாக ஒரு கதை பரப்ப பட்டு வருகின்றது. போட்டோவும் வெளியிடப்பட்டுள்ளது. 

Holy Smoke (புனித புகை)  Holy Fire (புனித நெருப்பு) என்றெனெல்லாம்  கதைகள் பரவ தொடங்கி விட்டன. Sun News உற்பட பல ஆங்கில இணையத்தளங்கள் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளன.  

பெரிஸ் நகரில் அமைய பெற்றுள்ள 800 வருடங்கள் பழைமை வாய்ந்த  முக்கிய கத்தோலிக்க தேவலயம் நேற்று முன் தினம் இரவு (15/04/2019)    தீப்பற்றி எரிந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருந்தது  உலகளவில் கிறிஸ்தவர்களிடையே ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. 

குறித்த தீ விபத்து பற்றி பல கிரிஸ்தவ அமைப்புக்கள், தலைமைகள் கவலை தெரிவித்திருந்தன. தேவாலய மீள் கட்டுமானம் பற்றியும், அதற்கான பண சேகரிப்பு பற்றியும் போப் பிரான்ஸிஸ்,  கிரிஸ்தவ திருச்சபைகள் உற்பட உலகளவில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புக்களும் கருத்து தெரிவித்து வருகின்றன. 

இதற்கிடையே குறித்த தேவாலய தீ விபத்தின் தீ சுவாலைக்குள்ளே இயேசுநாதரை தான் தெளிவாக கண்டதாக திடீரென ஒரு பெண் செய்தி வெளியிட்டுள்ளார்.

 லெஸ்லி ரொவன் (Lesley Rowan) என்ற பெயர் கொண்ட, 38 வயதுடைய  ஐக்கிய இராஜ்ஜியத்தின்  (எலெக்ஸென்றியா, ஸ்கொட்லேன்ட்) நகரில் வசிக்கும் பெண்ணே  குறித்த செய்தியை முதலில் தெரிவித்திருந்தார். 

நான் பார்த்த போட்டோ ஒன்றில்   தேவாலயத்தின் ஒரு பகுதி தீ விபத்தால் கடுமையாக சேதமுற்றிருந்ததை கண்டேன். குறித்த போட்டோவில் காணப்பட்ட தீ சுவாலைக்குள் இயேசுநாதர் காட்சியளிப்பது தெளிவாக தெரிகின்றது.   அதனை நான் தெளிவாக வட்டமிட்டு காட்டியுள்ளேன் என்றார்.  அவர் வட்டமிட்டு காட்டியுள்ள போட்டோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய அடுத்த நிமிடமே பரபரப்பு ஆரம்பமாகி விட்டது.  குறித்த தேவாலயம் எரிந்து கொண்டிருப்பதை காண்பிக்கும் வீடியோக்களில் இருந்து  பல்வேறு கோணத்திலும் போட்டோக்களை பிடித்து  பலரும் பதிவேற்றி வருகின்றனர்.  

தேவாலயம் பற்றி எரிந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தபோதிலும்  இயோசுவின் தோற்றம் எமது உள்ளங்களை அமைதி பெறச் செய்து விட்டது , குளிர்ச்சியடைய செய்து விட்டது என ஆயிரக்கணக்கானோர் பலவாறும் எழுதி, கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகளவில் கிறிஸ்தவ (கத்தோலிக்க) சமூகத்திற்குள்ளே குறித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களின் சுமையை, பாவங்களை சுமக்க அன்று தன்னையே சிலுவைக்கு  பலி கொடுத்த கர்த்தர் இன்று 2000 ஆண்டுகளுக்கு பிறகு எமது பாவங்களையும் சிரமங்களையும் சுமக்க மீண்டும் வந்துதித்து நெருப்பில் எரிந்து கொண்டிருக்கின்றார் என ஜேர்மனின் பல்கலைகழகமொன்றின்  விரிவுரையாளர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்ததை சில ஆங்கில வெப்தளத்தில் கண்ணுற்றேன். 
பாவம், பரிதாபம்...... 

எமது தெளிவான மார்க்கமாகிய  இஸ்லாத்தை ஏற்று, முஸ்லிம் என்ற நாமத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பலர் கூட ஏதாவது சம்பவங்கள், நிகழ்வுகளின் போது கண்டதாக, தோன்றியதாக குறிப்பிட்டு இது போன்ற பல மடத்தனமான கட்டுக்கதைகளை பரப்பி விட்டு அவற்றின் மூலம் அள்ளாஹ்வை, அவனது தூதரை, இஸ்லாத்தை உண்மை படுத்த முயற்சிப்பதை பார்த்திருக்கின்றோம். ஆர்வக் கோளாறின் காரணமாக எம்மவர்கள் பலர் நான் முந்தி, நீ முந்தி என சமூக வலைத்தளங்களுக்கூடாக அவ்வாரான கட்டுக்கதைகளை பரப்பி விடவும் செய்கின்றனர். இஸ்லாத்தின் தெளிவான  கொள்கையை உண்மைப்படுத்த குர்ஆனும், அள்ளாஹ்வின் தூதரவர்களின் வாழ்க்கை முறைமையும் போதுமானதாகும். 

மூட  நம்பிக்கைகள் இல்லாதொழிக்க பட வேண்டும், சமூகம் தெளிவை பெற வேண்டும். அள்ளாஹ்  அனைவருக்கும் நேர்வழியை காண்பிப்பானாக 

தொகுப்பு: 
அஷ் ஷெய்க் ஷfபீக்  zஸுபைர்.  

(சன் இணையத்தளம் வெளியிட்டிருந்த ஆங்கில மொழியிலான குறிப்பின் Link கீழே இணைக்கப் பட்டுள்ளது) https://www.google.com/amp/s/www.thesun.co.uk/news/8879991/notre-dame-fire-photos-faces-jesus-christ-flames/amp/

2 கருத்துரைகள்:

நபி ஈசா (அலை) அவர்கள்,ஏக இறைவன் அல்லாஹ்வினால் வானிலிருந்து பூமிக்கு அனுப்பப்படுவார்.அது எந்த இடம் என Muslim மக்கள் அனவருக்கும் நண்றாக தெரியும்.

Dear Muslim Brothers and Sisters... Do not lose you EEMAN,,, in this type belief.

Post a Comment