Header Ads



"தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்தும், நடவடிக்கை எடுக்காமையானது முழு குற்றமாகும்"

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் பிரிவு ஐந்தின் படி நாட்டுக்கு ஆபத்தான விடயமொன்றை தனி மனிதன் அறிந்து கொண்டால் அந்த விடயத்தை பொலிஸாருக்கோ அல்லது இது தொடர்பான திணைக்களங்களுக்கோ தெரியப்படுத்த வேண்டும் என இலங்கையின் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

இலங்கையில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் தமக்கு தெரியும் என அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் ஹரீன் பெர்ணான்டோ ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

மேற்குறிப்பிட்டவர்களுக்கு இந்த விடயம் முன்னரே தெரியுமானால் முன்கூட்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏன் செய்யவில்லை என்பது முதலாவது கேள்வி.

ஆனால் இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் பிரிவு ஐந்தின் படி நாட்டுக்கு ஆபத்தான விடயமொன்றை தனி மனிதன் அறிந்து கொண்டால் அந்த விடயத்தை பொலிஸாருக்கோ அல்லது இது தொடர்பான திணைக்களங்களுக்கோ தெரியப்படுத்த வேண்டும்.

அவ்வாறு நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ ஆபத்தான விடயங்களை தெரியப்படுத்தாது மௌனம் காப்பதானது பாரிய குற்றமாக கருதப்படுகிறது.

இப்படியான ஆபத்தான விடயங்களை அரசுக்கு மறைத்தால், அதனை குற்றச்சாட்டாக எடுத்து சந்தேகநபர்களை கைது செய்து தண்டிக்கும் சட்ட சரத்துகளும் உள்ளன.

அதன்படி அதிகூடிய தண்டனையாக சந்தேகநபருக்கு ஏழு ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் இலங்கையின் எட்டு இடங்களில் குண்டுகள் வைத்து நூற்றுக்கணக்கான மக்களை பலி கொடுத்தவர்கள் பாரிய குற்றவாளிகளாவர்.

அதேவேளை இந்த விடயம் தொடர்பில் முன்கூட்டியே அறிந்தும் நடவடிக்கை எடுக்காமையானதும் முழு குற்றமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.