Header Ads



புர்கா ஆடை இஸ்லாமிய கலாசாரத்துக்கு உரித்தானதல்ல, அந்த ஆடையை நீக்க முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்

புர்கா ஆடை இஸ்லாமிய கலாசாரத்துக்கு உரித்தானதல்ல. அந்த ஆடையை நீக்குவதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். ஆனால் புர்கா ஆடை பற்றி பேசி இந்த தொடர்குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணியாக இருந்த சம்பவங்களை அரசாங்கம் மூடி மறைக்க முயற்சிக்க கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற அடிப்படைவாத தாக்குதல் கிறிஸ்தவ மக்களை மாத்திரம் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல. ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களுக்கும் எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க் கட்சி அலுவலகத்தில் இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முஸலிம் இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர் இதனை தெரிவித்தார்.

8 comments:

  1. வெற்றுப் பானையில் சுரண்டும் நண்டுபோல வெற்று அரசியல்போக்கிரிகள் இப்போது சரீஆ பற்றியும் தீர்மானம் எடுக்கத்தொடங்கிவிட்டார்கள். தன்னைப் பற்றியோ தனது வரையறைகள் பற்றியோ எந்த கரிசனையுமற்ற வெறும் பானையைச் சுரண்டும் நண்டுகள்.

    ReplyDelete
  2. iwer enga irundu wandaaru.iwer muslima???

    ReplyDelete
  3. குர்ஆனில் கூறப்பட்டதை மறுக்க முடியாது இவர் தனது தனிப்பட்ட கருத்தை தெரிவிப்பது மிகப்பெரிய தவறு

    ReplyDelete
  4. This guy is useless for our Muslim society - already jamiyyathul ulama announced No need "Burka" this moment. so why you post this useless guy interview. - I hope jaffna musilm does not have any hot news.

    ReplyDelete
  5. சில நேரங்களில் வார்த்தைகளைவிட மெளனம் சிறந்ததது !!!

    ReplyDelete
  6. it is better to use "avoid" than "ban" of burqa

    ReplyDelete
  7. ACJU did not explicitly say don’t wear Burqa rather they conveniently stated ‘better staying home’. This statement can be OK for rich forks but how about a burqa wearing woman should go to work or run errands. Why can’t ACJU publish a comprehensive Fatwa stating the permissibility of freely going out without Burqa. I doubt they will do this as this action could infer that they mislead the community so far. For ACJU and it leadership, they never make mistakes.

    ReplyDelete
  8. முகம் மூடுமாறு குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஏவப்படவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.