Header Ads



சிங்­கள மொழி குர்ஆன் முழு நாட்டுக்கும், இஸ்லாம் தொடர்பான தெளிவுகளை வழங்கும் - முப்தி ரிஸ்வி

எமது நாட்டின் வர­லாற்றில் முக்­கிய நிகழ்­வொன்று கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வினை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. அன்று சிங்­கள மொழி­யி­லான அல்­குர்ஆன் விளக்­க­வுரை வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.

அல்­குர்­ஆனின் சிங்­கள மொழி­பெ­யர்ப்பின் முதற்­பி­ரதி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்­தி­யினால் ஜனா­தி­ப­திக்கு கைய­ளிக்­கப்­பட்­டது. நிகழ்வில் கலந்து கொண்­ட­வர்­க­ளுக்கும் அல்­குர்ஆன் மொழி பெயர்ப்பு பிரதி இல­வ­ச­மாக வழங்­கப்­பட்­டது.

நிகழ்வில் உரை­யாற்­றிய அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, 

‘முஸ்­லிம்கள் தொடர்­பா­கவும், இஸ்லாம் தொடர்­பா­கவும் பொய்­யான குற்­றச்­சாட்­டு­களும், மோச­மான விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து அவற்­றுக்­கான தெளி­வு­க­ளையும் சரி­யான பதில்­க­ளையும் வழங்க வேண்­டிய கட்­டாய நிர்ப்­பந்­தத்­திற்கு இஸ்­லா­மிய அறி­ஞர்­களும், கல்­வி­மான்­களும் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர்.

இந்தச் சவாலை ஏற்ற அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை புனித அல்­குர்­ஆனின் சிங்­கள மொழி­யி­லான விளக்­க­வு­ரையை அனை­வரும் புரிந்து கொள்ளும் வகையில் இலகு மொழி­ந­டையில் மொழி­பெ­யர்க்கும் பணியை 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஆரம்­பித்து.

கடந்த காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களைத் தொடர்ந்து முன்­னெ­டுத்த பொது­பல சேனா அமைப்பு குர்­ஆனை நிந்­தனை செய்­தது. அவ்­வ­மைப்பின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சா­ர­தேரர் குர்ஆன் தீவி­ர­வா­தத்தைப் போதித்­தி­ருப்­ப­தாக சவால்­விட்டார். அல்­லாஹ்­வையும், குர்­ஆ­னையும், நபிகள் (ஸல்) அவர்­க­ளையும் நிந்­தித்தார். குர்ஆன் தொடர்­பான விளக்­கங்­களை உலமா சபை ஞான­சா­ர­தே­ர­ருக்கு ஏற்­க­னவே வழங்­கி­யி­ருக்­கி­றது. அவ­ரது சந்­தே­கங்­க­ளுக்கு தெளிவு வழங்­கி­யி­ருக்­கி­றது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை குர்ஆன் விளக்­க­வுரை சிங்­கள மொழியில் வெளி­யீடு செய்­ததன் மூலம் இஸ்லாம், தொடர்­பான சந்­தே­கங்­க­ளுக்கு விடு­த­லை­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

‘சிங்­கள மொழி மூல­மான குர்ஆன் விளக்­க­வுரை முழு நாட்டு மக்களுக்கும் இஸ்லாம் தொடர்பான தெளிவுகளை வழங்கும் என நம்புகிறோம்’ 

முஸ்­லிம்­களின் தாய்­நாடு இலங்­கையே. இந்­நாட்டு முஸ்­லிம்கள் பௌத்த, இந்து, கிறிஸ்­தவ மக்­க­ளுடன் கைகோர்த்து ஒரே­தாயின் பிள்­ளை­களைப் போன்று வாழ்­கி­றார்கள். இத­னையே அல்­குர்­ஆனும் போதித்­துள்­ளது. இலங்கை முஸ்­லிம்­களின் தாய்­மொழி தமி­ழாக இருந்­தாலும் அதி­க­மான முஸ்­லிம்கள் சிங்­கள மொழி­யினைத் தாய் மொழி­யாகக் கொண்­டுள்­ளார்கள்.

இன்று வெளி­யிட்டு வைக்­கப்­படும் சிங்­கள மொழி­யி­லான அல்­குர்ஆன் விளக்­க­வுரை சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தைப் பலப்­ப­டுத்தும் பால­மாக அமையும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில், ‘சிங்­க­ள­மொ­ழியை அரச மொழி­யாகக் கொண்­டுள்ள ஒரே நாடு இலங்­கை­யாகும். அல்­குர்ஆன் மனித சமு­தா­யத்­திற்­கான வழி­காட்­டி­யாகும். அது முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­திரம் உரித்­தா­ன­தல்ல, முழு சமு­தா­யத்­துக்கும் உரித்­தா­ன­தாகும். அல்­குர்ஆன் மனித உரிமை பற்றிப் பேசு­கி­றது. ஏனைய மதங்­களை கௌர­விக்­கும்­படி கூறி­யுள்­ளது. அடுத்­த­வர்­களைத் துன்­பத்­துக்கு உள்­ளாக்­கா­தீர்கள் என்­கி­றது. எதி­ரி­க­ளுக்கும் உதவி செய்­யும்­படி கூறி­யுள்­ளது. நல்­ல­தையே செய்­யும்­ப­டியே குர்ஆன் போதிக்­கி­றது. இது அல்­லாஹ்வின் போத­னை­க­ளாகும்.

குர்­ஆனைப் பற்­றிய பொய்ப் பிர­சா­ரங்­க­ளி­னாலும், முஸ்­லிம்­களைப் பற்­றிய தவ­றான கருத்­துக்­க­ளாலும் இந்­நாட்டில் முஸ்­லிம்கள் பல சவால்­களை எதிர்­கொண்­டார்கள். குர்­ஆனைப் பற்­றிய புரிதல் இன்­மையே இதற்குக் கார­ண­மாகும். குர்­ஆனைப் பற்றி தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­காக, குர்­ஆனின் போத­னை­களை விப­ரிப்­ப­தற்­கா­கவே சிங்­கள மொழி பெயர்ப்பு வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மொழி பெயர்ப்பு தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மை­யையும் பலப்­ப­டுத்தும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

1 comment:

Powered by Blogger.