Header Ads



கிரிங்கதெனியவில் தௌஹீத் அமைப்புக்களின், நடவடிக்கைக்கு தடை - பள்ளிவாசல் நிர்வாகம் அறிவிப்பு

- எம்.எல்.எஸ்.முஹம்மத் - 

நாட்டில் தற்போது நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் மற்றும் ஊர் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு மாவனல்லை கிரிங்கதெனிய பகுதியில் தௌஹீத் ஜமாத் அமைப்புக்களின் அனைத்து இயக்க நடவடிக்கைகளுக்கும் கிரிங்கதெனிய ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் இன்று(26)தடை விதித்தது.

இது தொடர்பாக மஸ்ஜித் நிர்வாக சபை தலைவர் அஷ்ஷெய்ஹ்.எம்.ஹுஸைன் ஹாபிஸ்  ஜும்ஆ தொழுகையின் பின் கருத்துத் தெரிவிக்கையில் 

"கிரிங்கதெனிய பகுதியில் தௌஹீத் அமைப்புக்களின் எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு மஸ்ஜித் நிர்வாகம் தடை விதிக்க தீர்மானித்துள்ளது.அத்துடன் இது தொடர்பாக தௌஹீத் இயக்க சகோதரர்கள் உட்பட ஊர் மக்கள் அனைவரும் மஸ்ஜித் நிர்வாகத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்",எனவும்  அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவொரு தௌஹீத் அமைப்பையும் சட்ட ரீதியாக தடை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

3 comments:

  1. சிறந்த தீர்மானம்,ஒவ்வொரு Muslim ஊரும் இந்த நடவடிக்கையை பின்பற்றவும்.இப்போதய நிலைமையில் எமது பாதுகாப்பு முக்கியமானது

    ReplyDelete
  2. இது ஒரு சரியான தீர்மானமாகும் நாட்டிலுள்ள ஒவ்வொரு மஸ்ஜிதிலும் எடுக்கவேண்டிய முடிவாகும்.

    ReplyDelete
  3. We should have taken this decision earlier to avoid all of theses disaster

    ReplyDelete

Powered by Blogger.