Header Ads



இன்றைய அமைச்சரவையில், ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை . அமைச்சர்கள் அதிர்ச்சி

நாடு மிகப்பெரும் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை சந்திக்கப் போவதாகவும் அதற்கு முகம்கொடுக்க அரசு தயாராகவேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் முன்னெச்சரிக்கை செய்திருக்கிறார்.

அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பல விடயங்கள் குறித்து கடும் விமர்சனத்தினை அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த ஜனாதிபதி ,சம்பள உயர்வு மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டில் தொடர் வேலைநிறுத்தம் மற்றும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தில் அரசு என்ன செய்யப் போகின்றது எனக் கேள்வியெழுப்பிய ஜனாதிபதி ,நாட்டின் இயல்பு நிலைமை பாதிக்காமல் இருக்கச் செய்யவேண்டியது அரசின் பொறுப்பென்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த எச்சரிக்கை அமைச்சர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்ததாகவும் நாட்டின் தலைவரான ஜனாதிபதியே இன்னொரு அரசுக்கு எச்சரிக்கை விடுப்பது போல கூறுவது வியப்புக்குரியதென்றும் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை மின்வெட்டை சமாளிக்கும் வகையில் தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரத்தினை கொள்வனவு செய்வதற்கு மின்சக்தி அமைச்சருக்கு அனுமதியையும் வழங்கியது இன்றைய அமைச்சரவை.

TN

No comments

Powered by Blogger.