Header Ads



குண்டு வெடிப்புக்காக வெட்கப்படுகிறேன் - நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் - சம்பிக்க

நான் இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சரும் இல்லை, சட்டம் ஒழுங்கு அமைச்சரும் இல்லை எனவும் இந்த அரசாங்கத்தில் அமைச்சர் என்ற வகையில் வெட்கப்படுகின்றேன், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன் எனவும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஜாதிக ஹெல உறுமய தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நாட்டின் சகலரும் இன, மத பேதமின்றி இந்த நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்போம்.

வனாத்தவில்லு பிரதேசத்தில் வெடிபொட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் அப்படியே மூடி மறைக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றமை உண்மையா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,

நேற்றைய வெடிப்புச் சம்பவங்கள் கடந்த நத்தார் தினத்தன்று மாவனல்லை சம்பவத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு நடவடிக்கையாகும். இதில் ஒரே குழுவினர் தான் உள்ளனர். இந்த அடிப்படைவாதக் குழுவுக்கு வெளிநாட்டு தொடர்பு காணப்படுகின்றது. இதனை ஒன்றிணைந்து அழித்தொழிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

1 comment:

  1. தயவு செய்து உண்மைகளை மறைக்காமல் மக்களுக்கு சொல்லவும் இதட்கு பின்னால் உள்ள அரசியல் அதிகாரிகள் மேலும் புலனாய்வுத்துறை எச்சரித்த பின்பும் நடவடிக்கை எடுக்காத்தின் இரகசியங்கள் உடனடியாக அமெரிக்கா இலங்கை நாட்டுக்கு உதவுவதாக அறிவித்து அவர்களின் FBI உளவாளிகள் எப்படயோ நம் நாட்டில் கால்பதித்துவிட்டார்கள் இதன் இரகசியங்களை அறிவிக்கவும்
    மீடியாக்களில் பேசப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு எச்சரிக்கை விடவில்லையே!மாற்றமாக பௌத்த சில தீவிரவாத்தைதான் அவன் எச்சரித்தான் எவ்வ்வாறு கிரிஸ்தவ தேவாலயங்களில் இந்த பொம்புகள் வெடித்தன ஏன்? இந்த இரகசியங்களை கட்டாயம் மக்களுக்கு சொல்லுங்கள்
    நம் நாட்டில் எடுக்க உள்ள எரிபொருட்களுக்காக நம் அரசாங்கம் யாரையும் பலிகொடுக்க தயாரா இதை செய்தவர் அன்னிய நாட்டவர்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் ஏன் சொல்ல தயங்குகின்றீர்கள்?

    ReplyDelete

Powered by Blogger.