Header Ads



முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அக்கறையின்றி இருப்பதாக குற்றச்சாட்டு

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப், நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளித்த அறிக்­கையை ஆராய்ந்து இறு­தித்­தீர்­வுக்கு வரும்­படி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கோரிக்கை விடுத்தும் இது­வரை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவ்­வி­வ­கா­ரத்தில் அக்­க­றை­யின்றி இருப்­ப­தாக தெரி­வித்­துள்ள வை.எம்.எம்.ஏ. அமைப்பு உட­ன­டி­யாக இது­பற்றி ஆராய்ந்து தீர்­வுக்கு வரும்­படி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளிக்­கப்­பட்ட அறிக்கை, குழு உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஓர் இணக்­கப்­பாட்டில் அல்­லாது முரண்­பட்ட வகையில் சிபா­ரி­சுகள் கைய­ளிக்­கப்­பட்­டி­ருப்­பதால் வை.எம்.எம்.ஏ. குழு உறுப்­பி­னர்­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யாடி இரு தரப்பும் ஏற்­றுக்­கொள்ளும் வகை­யி­லான சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்­கை­யொன்­றினை நீதி­ய­மைச்­சிடம் வை.எம்.எம்.ஏ. சமர்ப்­பித்­தி­ருப்ப தாகவும் வை.எம்.எம்.ஏ. யின் தேசிய பொதுச்­செ­ய­லாளர் சஹீட் எம். ரிஸ்மி ‘விடிவெ ள்ளி’ க்குத் தெரி­வித்தார்.

குழுவின் தலைவர் ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் மற்றும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா ஆகி­யோரை நேரில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யதன் பின்பே வை.எம்.எம்.ஏ. ஒரு நடு­நி­லை­யான அறிக்­கையைத் தயா­ரித்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

10 வருட கால­மா­கியும் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டத் திருத்­தங்கள் தொடர்ந்தும் இழு­பறி நிலையில் இருக்­கின்­றது. இது தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அக்­க­றை­யின்றி இருக்­கி­றார்கள். அதனால், அவர்­களை இது விட­யத்தில் விரைந்து செயற்­ப­டு­மாறு வை.எம்.எம்.ஏ கோரி­யுள்­ளது.

நீதி­ய­மைச்சர் இறு­தித்­தீர்­மானம் எடுக்கும் பொறுப்­பினை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கே வழங்­கி­யுள்ளார். அதனால் அவர்கள் தொடர்ந்தும் தாம­திக்கக் கூடாது என்றார்.

இதே­வேளை, முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு கால­தா­மதம் ஏற்­ப­டு­வ­தற்கு நான் கார­ண­மல்ல. முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு அங்­கத்­த­வர்கள் தங்­க­ளுக்குள் முரண்­பட்­டுக்­கொண்டு இரு வேறான சிபா­ரி­சு­களை முன்­வைத்­தி­ருப்­பதே தாம­தத்­திற்குக் கார­ண­மாகும் என்று நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றும்­போது குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மிடம் வின­வி­ய­போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட திருத்த சிபாரிசுகள் குறித்து ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளும் பொறுப்பினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏற்றிருக்கிறார். விரைவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி இது தொடர்பில் ஆராய்வோம் என்றார்.
-Vidivelli

3 comments:

  1. முஸ்லீம் விவாக விகாகரத்து சட்டம் திருத்தப்பட வேண்டுமாக இருந்தால்
    முழுக்க முழுக்க குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
    அது அணுகப்படவேண்டும்.அதற்கு பொருத்தமான அமைப்பு எமது நாட்டை
    பொறுத்தவரை ஜம்மியத்துல் உலமா
    சபையாகும். இச்சபையை இதில்
    உள்வாங்காமல் சீர் செய்வதென்பது
    பூரணத்துவமாகாது. எனவே ஜம்மியத்துல் உலமா சபை இதில் உள்
    நுழைந்து தனது பொறுப்பை நிறை
    வேற்றுவது கடமையாகும்.

    ReplyDelete
  2. Justice Masroof an educated and knowledgeable individual did his part professionally and submitted the Draft for review and implementation, but unfortunately some rogue elements who have vested interest are trying to sabotage the matter. Govt. & Justice Minister should act with backbone without sleeping on the matter further.

    ReplyDelete
  3. Without this Act if 9 years can just pass-by what is the big deal. Muslims are still marrying, divorces & elopements are taking place, then who cares whether you have this Act in place or not. A further 9 or 90 years can go-by without this Act & nothing is going to stop, the whole issue is politicised as simple as that.

    ReplyDelete

Powered by Blogger.