Header Ads



பயங்கரவாதிக்கு மனநல பரிசோதனை நடத்தி, விசாரணைக்கு தகுதியுடையவனா என கண்டறிய உத்தரவு

நியூசிலாந்து பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி விசாரணையை எதிர்கொள்ள தகுதி உடையவரா என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

நியூசிலாந்தின் க்றைஸ்ட்சர்ச் நகரில் கடந்த மார்ச் 15-ந் திகதி இரு பள்ளிவாசல்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 50 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டை நடத்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரெண்டன் கைது செய்யப்பட்டு, ஒக்லண்ட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 50 கொலை வழக்குகள் , 39 கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்றுக்காலை பிரெண்டன் காணொளி மூலம் நீதிபதி கெமரூன் மண்டேர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, குற்றம் சாட்டப்பட்ட பிரெண்டனுக்கு மனநல பரிசோதனை நடத்தி, அவர் விசாரணையை எதிர்கொள்ள தகுதி உடையவரா என்பதை மன்றில் தெரிவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அடுத்தகட்ட விசாரணைக்காக பிரெண்டனை ஜூன் 14-ந் தேதி மீண்டும் ஆஜர்படுத்த வேண்டுமென நீதிபதி கூறினார்.

முன்னதாக விசாரணையின் போது, பிரெண்டன் எதுவும் பேசாமல் சற்றும் ஆர்வமற்ற நிலையில் இருந்ததாகவும், அதேசமயம் மனநலம் பற்றி நீதிபதி கூறும்போது போது மட்டும் உன்னிப்பாக கவனித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதற்கிடையில் மனநலம் குன்றிய ஒருவர் எப்படி திட்டமிட்டு கொலைகளை செய்திருக்க முடியுமென விமர்சனங்கள் எழுந்துள்ளன. TN

1 comment:

  1. Lucky he is not a Muslim... if so he will not have this kind test...directly labeled as terrorist. Now they are trying find ways to say he is a psycho.

    The world and Newzeland court system are find way to protect him from punishment and to say no world terrorist organisations connected to his action. If his connections to the world groups are identified.. then the world will find all christian terrorist groups acting around the world. So wanted not explore this.

    ReplyDelete

Powered by Blogger.