Header Ads



லதீபுக்கு கிடைத்த தகவலையடுத்து, மெளலவி ஒருவர் பொலிசாரினால் செய்து

(வீரகேசரி)

தொடர் தற்கொலை குண்டுத்தககுதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் நாட்டின் பல பகுதிகளிலும் சுமார் 70 இற்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

எனினும் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு 32 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றது. இதனைவிட பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நான்கு சந்தேக நபர்களை கைதுசெய்து விசாரித்து வருகின்றது. இதற்கு மேலதிகமாக  கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வரகாபொலை சோதனையும் சிக்கிய வேன், மோட்டார் சைக்கிளும்

இதனிடையே நேற்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தபோது, பொலிஸ் விஷேட அதிரடிப் படை கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீபுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விஷேட  சுற்றிவளைப்பொன்று வரகாபொலை பகுதியில் நடத்தப்பட்டது. கேகாலை  பொலிஸ் விஷேட அதிரடிப் படை முகாமின் பொலிஸ் பரிசோதகர்  ரோஹன குமார தலைமையிலான குழுவினர் இந்த சுற்றிவளைப்பினை நடத்தினர். 

வரகாபொலை - அங்குருவல வீதியின்  மஸ்ஜித் மாவத்தை பகுதியில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. இதன்போது சந்தேகத்துக்கு இடமானது என அறிவித்து தேடப்பட்டு வந்த எஸ்.ஜி.பி.எச். 3779 எனும் கே.டி.எச். ரக வேன் ஒன்றும் 144 - 2446 எனும் இலக்கத்தை உடைய செம்மஞ்சள் நிற மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.முதலில் மோட்டார் சைக்கிளை மீட்ட பொலிசார் பின்னர் வேனைக் கைப்பற்றினர். 

இதன்போது அங்கு வீட்டில் தங்கியிருந்த  மொஹம்மட் ஜுனைட் மொஹம்மட் அமீன் என்பவரையும் மற்றொருவரையும் பொலிசார் கைதுசெய்தனர். அதன்பின்னர் அவர்களது வீட்டை சோதனை செய்த பொலிசார் அங்கிருந்து 4 வோக்கி டோக்கிகளை கைப்பற்றினர். 

இந் நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, 47 வயதான மொஹம்மட் ஜுனைட் மொஹம்மட் அமீன் கே.டி.எச். ரக வேனின் சாரதியாக செயற்பட்டுள்ளமையும் அவர், மாவனெல்லை - ஹெம்மாத்தகம பகுதியைச் சேர்ந்த மெளலவி ஒருவரின் கோரிக்கைக்கு அமைய கடந்த இரு வாரங்களாக டுபாயில் இருந்து வந்ததாக கூறப்படும் ஒரு குழுவை நாடு முழுதும் அழைத்துச் சென்றிருந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து ஹெம்மாத்தகமையைச் சேர்ந்த குறித்த மெளலவியையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

No comments

Powered by Blogger.