Header Ads



கத்தோலிக்க சமூகத்திற்கு, குவைத் வாழ் இலங்கை முஸ்லிம்களின் இரங்கல்


கடந்த 21.04.2019 ம் அன்று இலங்கையில் வாழும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும், இதன் மூலம் உயிரிழந்த மற்றும் காயப்பட்ட அப்பாவி மக்களுக்காக அனுதாபம் தெரிவிக்கவும் 27.04.2019 ம் அன்று குவைத்-வாழ் இலங்கை முஸ்லிம் அமைப்பினர் கலாநிதி ஹனஸ் அவர்களின் தலைமையில் மதிப்புக்குரிய Father  ஐவன் அந்தொனி பெரேரா அவர்களை குவைத் சிட்டியில் அமைந்துள்ள புனித கிறிஸ்தவ தேவாலயத்தில் சந்தித்து தங்களது அனுதாபத்தை தெரிவித்து கொண்டனர். 

முஸ்லிம் பிரதிநிதிகள் தங்களது உரையில் இவ்வாறானதொரு தாக்குதல்கள் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை எனவும் இதுபோன்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் இனியும் இடம்பெறாதவாறு அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். மேலும், மரியாதைக்குரிய Cardinal Malcom Ranjith அவர்கள் இலங்கை தாக்குதலுக்கு பின்னர் பொறுப்பாக நடந்துகொண்ட விதத்தை  பாராட்டியதோடு,  சர்வ மத அமைப்புக்களும் ஒன்றிணைந்து இலங்கையில் இனங்களுக்கிடையே புரிந்துணர்வும் , சமாதானமும் நிலவ பாடுபடவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

Father ஐவன் அவரின் உரையில், வருகை தந்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு சர்வ மத அமைப்புக்களும் ஒன்றிணைந்து இலங்கையில் இனங்களுக்கிடையே புரிந்துணர்வும், சமாதானமும் வளர்ப்பதற்கு அவராலான அனைத்து உதவிகளையும் புரிவதாக கூறியதோடு, இவ்வாறான முன்னெடுப்புக்களை எதிரகாலத்திலும் மேற்கொள்ளுமாறும் அவர் ஏற்பாட்டு குழுவினரை வேண்டிக் கொண்டார். இறுதியில் இலங்கையர்கள் என்ற ரீதியில் நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதனையும் வலியுறுத்தினார். இச்சந்திப்பில் அவரோடு மேலும் சில கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளும் கலந்துகொண்டிருந்தனர் .

(ஜெசீம் ஜுனைதீன் )



No comments

Powered by Blogger.