Header Ads



கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை, எனக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது
கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை தெற்கு பிரதேச செயலகம் ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதுதான் கல்முனை மாநகரசபையாக இருக்கின்றது. 

இதில் சாய்ந்தமருது, கல்முனை தெற்கு ஆகியவற்றில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது, கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்நிலையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்கள், தமது பிரதேச செயலக பிரதேசத்தை, கல்முனை மாநகரசபைக்கு முற்றிலும் வெளியே பிரித்தெடுத்து முழுமையான நகரசபையாக்க கோரி போராடுகிறார்கள். இந்நிலையில் கல்முனை வடக்கு தமிழ் சமூக தலைவர்கள் தமது உப பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோரி போராடுகிறார்கள். 

ஒரே இனத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள், தனி நகர சபைக்காக போராடும் போது, சகோதர இனத்தை சார்ந்த தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர வேண்டும் என போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது என இந்த கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் தர்க்கரீதியாக எடுத்து கூற வேண்டும். 

இந்த பிரச்சினையினால் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன நல்லுறவு சீர்கெடுவதை இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் மனோ கணேசன் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கூறியள்ளதாவது, 

இது தொடர்பில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் தரப்பினர் என்னை சந்தித்து உரையாடியுள்ளனர். இதையடுத்து இப்பிரச்சினை தொடர்பில், துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனும் நான் தேசிய ஒருமைப்பாட்டு துறைசார் அமைச்சர் என்ற முறையில் கலந்தாலோசித்துள்ளேன். 

சற்று முன்னரும் இது தொடர்பில் அமைச்சர் வஜிரவுடன் உரையாடினேன். இதை இனியும் தொடர்ந்து நீடிக்க விடுவது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமாக அமைந்துவிடும் எனவும், புத்தாண்டு விடுமுறையை அடுத்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தீர்மானத்துள்ளோம். 

இன, மத அடிப்படைகளில் கல்வி வலய, பிரதேச செயலக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வேறு மாவட்டங்களில் இவை நடைமுறையில் இருக்கின்றன. 

எனவே கல்முனை வடக்கு தமிழ் மக்கள் தொடர்பில் மாத்திரம், இதில் தவறு காண்பது முறையல்ல. அத்துடன் ஏற்கனவே இயங்கி வரும் உப-பிரதேச செயலகத்தையே முழு-பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படியே கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. 

எனவே கல்முனை உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர வேண்டும் என்ற கோரிக்கையில் என்ன தவறு இருக்கின்றது என இந்த கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் நாட்டுக்கு இதுவரையில் தர்க்கரீதியாக எடுத்து கூற தவறியுள்ளார்கள் என நான் நினைக்கிறன். 

உண்மையிலேயே கடந்த பல பத்தாண்டு காலங்களாக எரிந்து வரும் இந்த பிரச்சினை தொடர்பில், நடந்து முடிந்த மாகாணசபை ஆட்சிக்காலத்தின் போது, கிழக்கு மாகாணத்தில் கூட்டாக ஆட்சி நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டாட்சி நிர்வாகம் தலையிட்டு சுமூகமான ஒரு தீர்வை கண்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை என்பது துரதிஷ்டவசமானது ஆகும். 

இன்று தமிழ் பேசும் இனத்தவர் மத்தியில் கிழக்கில் இந்த பிரச்சினை மெல்ல, மெல்ல பூதாகரமாகி கொண்டு வருகிறது. கண்ணிருந்தும், காதிருந்தும், அறிவிருந்தும், இதை பார்க்காமல், கேட்காமல், ஆராயாமல் பொறுப்பற்று நாம் இனியும் இருக்க முடியாது. 

மேலும் இனங்களிடையே சச்சரவு புள்ளிகளை அடையாளம் கண்டு நிவர்த்திக்கும், தேசிய ஒருமைபாட்டையும், ஏனைய பொறுப்புகளுக்கு மத்தியில், ஒரு பொறுப்பாக வரித்துக்கொண்டுள்ள துறை சார் அமைச்சரான எனக்கு இந்த பிரச்சினை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

6 comments:

  1. எனது கல்முனை,சாய்தமருது சகோதரர்களே,பள்ளி நிருவாகிலே இப்போது புரிகிறதா Muslim கலாகிய எமக்கு ஒற்றுமை என்பது எவ்வளவு முக்கியம் என,நீங்கள் உங்களுக்குல்லேயே இரு ஊராரும் பிரதேச வாதம் பேசிக்கொண்டிருக்க.அடுத்த இன்னும் ஒரு தரப்பு உங்களுக்குல் புகுந்து நீதி எனும் போர்வையில் Muslim கள் எனும் எமது பலத்தை பிரதேச வாதம் எனும் உங்கள் இரு சாராரின் பலகீனத்தை கொண்டு விசப்பரிட்சை ஒண்றை நடத்தப்போகின்ரது.இனியும் நீங்கள் இரு தரப்பாரும் தொடர்ந்து இதே பிடிவாதத்தில் இருந்தால் எம்மை கூருபோட்டு கொஞ்ஞம் கொஞ்ஞமாய் அழிக்கும் திட்டம் மிக கச்சிதமாய் நடக்கும்.எதிர்காலதில் கல்முனை,சாய்ந்தமருதில் ஆரம்பித்து Sri Lanka முழுவதும் நடக்கும்.இறுதியில் பார்லிமெண்ட்,மாகாணசபை,நகரசபை,பிரதேசசபை எதிலுமே நாம் பெரும்பாண்மை பெறுவது கனவாகிவிடும்.(ஒரே வீட்டுக்குள்லேய நீங்கள் அடித்துக்கொல்லும் போது வீதியால் போகிறவர்கல் வந்து உங்களுக்கே தெரியாமல் உங்கள் உடமைகளை சுரண்டும் நிலை ஏற்படும்.sri Lanka Muslim களே உங்கள் காலை பிடித்துக் கேட்கிறேன்,விட்டு விடுங்கள் பிரதேச வாதத்தை நாம் எந்த பிரதேசத்தில் வாழ்ந்தாலும் Muslim கள். எம்மை வட,கிழக்கில் கூறு போட்டு கடைசியில் முற்றாக அழிக்கும் சூழ்ச்சி ஆரம்பமகபோகின்ரது.இனியாவது விழித்துக்கொல்லுங்கல்

    ReplyDelete
  2. Muslim அரசியல் வாதிகலே எங்கே நீங்கள் தூங்கிவிட்டீர்கலா.வடக்கையும் கிழக்கையும் இணைப்பதர்க்கான திட்டம் கல்முனைசாய்ந்தமருதில் இருந்து ஆரம்பிக்க எங்கோ இருந்தெல்லாம் படை,பட்டாலதோடு கிழக்கில் முகாமிட்டுல்லார்கல்.நீங்கள் இனியாவது விழியுங்கல்.

    ReplyDelete
  3. திரு.மனோ கனேசன் அவர்களே,வெய்லிலும்/மழையிலும் வாடி வதங்கி ஓடாய் தேய்ந்தும்,சிருத்தைகலும்,குழவிகலும் திரிகின்ர மலையில் பல மணி நேரம் வேலை எனும் போர்வையில் சுரண்டப்படும் அந்த மலை வாழ் தமிழனுக்கு முதலில் அவன் கணவான 1000 ரூபாய் சம்பளத்தை வழங்க நடவடிக்கை செய்து விட்டு,வாருங்கள் கிழக்கில கட்ட பஞ்ஞாயம் பன்னுவதக்கு.

    ReplyDelete
  4. கொழும்பில் இவனுடைய கட்சியை விட்டு பலரும் வெளியேறிக்கொண்டிருக்க இவனுக்கு இவன் அரசியல் வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ள முஸ்லிம்களினுடையதை கழுவ வேண்டி நிலை வந்துவிட்டது. வடக்கு கிழக்கு மத்தி கொழும்பு என்று இல்லாமல் தமிழன் எல்லோரும் முஸ்லிம்களை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு விட்டார்கள். மஹிந்தவை நாம் வீட்டிற்கு அனுப்பி பெரிய தவறை இளைத்துவிட்டோம். மஹிந்த போட்ட திட்டத்தில் 2010 தேர்தலில் இவன் மண்ணை கவ்வினான். ஆனால் கடந்த முறை தேர்தலில் இவன் தோற்றும் ரோஸி சேனநாயக்காவின் வெற்றி நல்லாட்சி அசிங்கங்களால் இவனுக்கு கொடுக்கப்பட்டது இன்று முஸ்லிம்களும் அனுபவித்துகொண்டிருக்கின்றார்கள்

    ReplyDelete
  5. கல்முனை தமிழர்களின் நியாயமான இந்த கோரிக்கையை இன துவேச முஸ்லிம்கள் எதிர்கின்றார்கள்.
    கிழக்கில் Isis வளர்ச்சியடைந்து வருவதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

    ReplyDelete
  6. மனோ கணேசன் ஐயா சொல்லுவது 100% சரியானது. மீசையும் கூழும் தங்களுக்கே வேண்டும் என்பவர்களிடம் அது சரிவராது என்று சொன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.